Homeசெய்திகள்அரசியல்பாஜகவுக்கு செக்..! தனிக் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை..! மலயின் மாஸ்டர் ஸ்கெட்ச்..!

பாஜகவுக்கு செக்..! தனிக் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை..! மலயின் மாஸ்டர் ஸ்கெட்ச்..!

-

- Advertisement -

அண்ணாபாஜகவில் பெரும் பதவியை குறி வைத்தே அரசியலுக்கு வநதுள்ளார் அண்ணாமலை. அதன்படியே மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மாநில தலைவர் பதவி உடனடியாக கிடைத்ததும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

யாரை எப்படி மிரட்ட வேண்டும். எப்படிச் சொன்னால் யார் நம்புவார்கள் என நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு அதன்படியே செயல்பட்டு வந்தார். அதுவும் முனாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் சொல்வது எல்லாமே உண்மையாகத்தான் இருக்கும் என பாஜக தலைமை நம்பியுள்ளது. இதில் ஒன்றுதான் போலீஸ்காரராக இருக்கும்போது இரண்டு லட்சம் எப்ஐஆர் போட்டேன் என்பது.

அதன்பிறகே சர்ச்சை வெடித்தது. அதே நேரத்தில் தலைவர் பதவி காலத்தில் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடிய ஆட்டத்தை பார்த்த அக்கட்சியின் முன்னால் தலைவர்கள் எல்லாருமே இன்னும் ஷாக்கில் இருந்து மீளாம முடியாமல் தவிக்கிறார்கள்.”கட்சியை வளர்க்கத்தானே நாம வந்தோம். ஆனால் இவரைப்போல இந்த ஆட்டம் ஆடவில்லையே” என மூக்கின்மேல் விரலை வைத்து அதிர்ச்சியாகிக் கிடக்கிறார்கள்.

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. தனித்து போட்டி

ஆனால் அவரது தலைவர் பதவி இன்னும் சில நாட்களில் பறிபோக இருக்கிறது. இதனால் ரொம்பவே மனம் ஒடிந்து போயிருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள். ஆனாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஆதரவாளர்களை களம் இறக்கி இருப்பதாக டெல்லி மேலிடத்திற்கு அவரது எதிரணியில் இருந்து தகவல் போனதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் டெல்லி மேலிடம் மகாராஷ்டிரா பட்நவீஸ் கதையை ஞாபகப்படுத்தி இருக்கிறார்கள். அமைதியா இருந்ததால் முதல்வர் ஆனார். அந்த பொறுமை இருந்தால் மீண்டும் மேலே வரலாம். முறுக்கினால் சுத்தமாக முடக்கிவிடுவார்கள் என்ற நிலவரத்தையும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அண்ணாமலையும் அவரது ஆடரவாளர்களும் அடங்கவில்லை. அத்துமீறி வருவதாகக் கூறப்படுகிறது.

தனது ஆதரவாளர்களை கூட்டிக்கொண்டு தனிக்கட்சியை தொடங்குவார் என பேசப்படுகிறது. இதெல்லாம் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான ஒரு தந்திரம் என்கிறார்கள். ஆனால், எதைப்பற்றியும் டெல்லி மேலிடம் கவலை கொள்ளலை என்றும் கூறப்படுகிறது. அவர்களின் ஒரே இலக்கு அதிமுக மீதேறி சவாரி செய்வது தான் என்கிறார்கள்.

MUST READ