Homeசெய்திகள்அரசியல்பாஜக தோல்வியில் வெற்றி பெற்றுள்ளனர்- தொல். திருமாவளவன் பேச்சு

பாஜக தோல்வியில் வெற்றி பெற்றுள்ளனர்- தொல். திருமாவளவன் பேச்சு

-

- Advertisement -
kadalkanni

 

பாஜக தோல்வியில் வெற்றி பெற்றுள்ளனர்- தொல். திருமாவளவன் பேச்சு

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

தொண்டர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,

அதிகாரத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறோம். நமக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் தேவை என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி தனது உரையை தொடங்கினர்.

சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் இது. 1991 ஆம் ஆண்டு மூப்பனார் தேர்தலில் போட்டியிட கொடுத்த ஐந்து இடங்களில் இரண்டு மட்டும் போதும் என கூறி சிதம்பரம் பெரம்பலூர் என இரண்டு தொகுதியில் போட்டி இட்டேன். அப்போது நான் அரசு ஊழியராக இருந்தேன். அப்போதே எனக்கு ஓட்டு போட்டதால் குடிகைளை கொளித்தி வாக்களித்தவர்களை கடுமையாக தாக்கினார்கள்.

தலித் அல்லாதவர்களுக்கு ஒரு எதிரி என்கின்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். இந்த நேரத்தில் என் வெற்றியை அவர்களுக்கு சமர்பிக்கிறேன் என கூறினார்.

2001-ல் திமுக உடன் கூட்டணி வைத்து உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது கூட  ஓட்டு போட முடியவில்லை என கூறினார். இன்று ஒரு கட்சிகளில் கூட்டணியில் சேர்வது சுலபமான காரியம் இல்லை கூட்டணிக்காக யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

2006 அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா, ஆனால் தனி சின்னமான மணி சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம் என தெரிவித்தார்.2009 ஆம் ஆண்டு ஸ்டார் சின்னத்தில் வெற்றி பெற்றேன். 2011-ல் மெழுவர்த்தி, 2014-ல் மோதிரம், 2016-ல் மோதிரம் 2019-ல் பானை, 2024 ஆம் ஆண்டிலும் பானையில் போட்டியிட்டோம் . 2009-ல் விழுப்புரத்தில் வெற்றி பெற்று இருந்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பே மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்து இருக்கும். கூனி குறுகி அரசியலில் பயணித்து உள்ளேன். தனித்து போட்டியிட்டு அடையாளம் காண்பித்த பின்னர் தான் மதிமுக, தேமுதிக, பாமக கூட்டணி வைக்க முடிந்தது, இதற்கு முதலில் கூட்டணி வைத்தது அதிமுக தான்.

நெருப்பு ஆற்று இல்லை, நெருப்பு ஆழியில் பயணித்தேன்.
அங்குலம் அங்குலமாக வளர்ந்தாலும் அழுத்தமாக வளர்கிறோம் என தெரிவித்தார்.

நான் பதவியை விரும்புகிற ஆள் என்றால் பழக்கப்பட்ட சின்னத்தில் வெற்றி பெறலாம், ஆனால் ஒவ்வொரு தேர்தலில் 3, 5 இடங்களை கேட்போம். ஆனால் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவோம். எல்லா வசுவுகளை தாண்டி இன்று 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிகளை பெற்றுள்ளோம். சமூக அங்கீகாரத்தை பெற்று, அரசியல் அங்கீகாரத்தை தொட்டு, சட்ட ரீதியான அங்கீகாரத்தை இன்று பெற்றுள்ளோம். இனிமேல் தான் வேகமாக உழைக்க வேண்டும். நெருப்புகளை கடந்து கரையை தொட்டுள்ளோம். திருமாவளவன் கண்கள் மட்டும் அல்ல 50 லட்சம் கண்களும் ஒரே இலக்கை கொண்டு செயல்பட வேண்டும் என கூறினார். கட்சியில் மறு சீரமைப்பு செய்ய உள்ளேன், அடுத்த சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வில்லை என்று வருத்தத்தில் உள்ளோம், இன்னும் உங்களுக்கு முதிர்ச்சி தேவை எனவும், பாஜக அரசின் பல்லை பிடுங்கி உள்ளனர் பொது மக்கள் என தெரிவித்தார். பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை, 63 இடங்களை பறி கொடுத்துள்ளது. பாஜகவிற்கு வெற்றியிலேயே ஒரு தோல்வி, காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியிலே ஒரு வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் நச்சு பல்லை பிடுங்கியுள்ளது இந்த வரலாற்று தேர்தல் என்றார்.

சந்திரபாபு, நிதிஷ் குமாரை கண்காணிப்பாளராக நியமித்துள்ளது இந்த ஆட்சி, நிலையில்லாத மத்திய ஆட்சியில் தான் தலித்துகளின் பங்கு முக்கிய துவம் பெறுவோம். தேர்தல் மழைக்காலத்தில் கத்திய தவளைகள் ஒரம் போகியுள்ளது என பாஜக மீது விமர்சனம் வைத்தார்.

பாஜக தனி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பு மக்கள் தரவில்லை கூட்டணி கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு தோல்வியில் ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு வெற்றியில் ஒரு தோல்வி கிடைத்திருக்கிறது. 52 இடத்தில் இருந்த காங்கிரஸ் 99 இடங்களுக்கு வந்து விட்டது, 303 இடங்களில் 240 வந்துவிட்டது. அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாது நம்மாலும் ஆட்சி அமைக்க முடியாது நமக்கும் பாடம் புகட்டியிருக்கிறார்கள் மக்கள், பாஜகவுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்கள். சாவக்கர் கனவுகளை நச்சு பல்கலை, இந்தத் தேர்தல் புடுங்கியிருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியால் ஒரு நிலையான ஆட்சியை தர முடியாது, இந்தத் தீர்ப்பை தலை வணங்கி வரவேற்கிறோம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என்று. ஒரு சிறப்பான அங்கீகாரம் வழங்கிய மக்களுக்கு, திமுக தலைமையிலான கூட்டணிக்கு, மாபெரும் வெற்றி 100 விழுக்காடு மிகப் பெரும் மகிழ்ச்சி தருகிறது.

மழைக்கால தவளைகள் போல கத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ஓரம் போய் கிடக்கிறார்கள். அதுபோல தேர்தல் காலத்திலே தாமரை மலரும் தாமரை மலரும் கத்திக் கொண்டிருந்தவர்கள் இது தாமரை மலரக்கூடிய தடாகம் இல்லை, இது தமிழ் வீசும் தடாகம் என்று தாமரைக்கு இங்கே வேலை இல்லை அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு வடக்கே ஓட வேண்டும் என்பது தவிர வேறு தீர்வு இல்லை, அப்படி ஒரு மகத்தான தீர்ப்பை தமிழக மக்கள் வழங்கி இருக்கிறார்கள். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

MUST READ