Homeசெய்திகள்அரசியல்நாடாளுமன்றத்தின் மாண்பை மீறும் பாஜக எம்.பி-க்கள் - கே.சி வேணுகோபால்

நாடாளுமன்றத்தின் மாண்பை மீறும் பாஜக எம்.பி-க்கள் – கே.சி வேணுகோபால்

-

- Advertisement -

அம்பேத்கரின் விரோதி அமித்ஷாவை காப்பாற்றக்கூடிய மிகப்பெரிய நாடகம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாண்பை மீறும் பாஜகவின் எம்.பி-க்கள் - கே.சி வேணுகோபால்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். அம்பேத்கர் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்க்கட்சிகள் செல்ல முயற்சித்த போது, நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி-க்களை பாஜக எம்.பி-க்கள் தடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் காங்கிரஸ் ,பாஜக எம்.பிக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவின் எம்.பி-க்கள் உள்ளே செல்ல விடாமல் தடுத்து மிரட்டியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டும் நிலையில், ராகுல் காந்தி பாஜக எம்.பி-க்களை தள்ளி விட்டதாகவும் இதனால் இரண்டு எம்பிக்கள் காயம் அடைந்ததாகவும் பாஜக தரப்பில் பதில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் விரோதி அமித்ஷாவை காப்பாற்றக்கூடிய மிகப்பெரிய நாடகம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றதாக விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பல்வேறு விவகாரங்களையும் முன்வைத்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தவறான எந்த ஒரு விஷயமும் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவில்லை. ஆனால் இன்று எப்படி திட்டமிட்டு பாஜக எங்களை தடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற வாயிலை யாரும் தடுக்க கூடாது என சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ள நிலையில் ,கையில் தடியுடன் பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் நின்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததாகவும், கட்டுக்கடங்காத பாஜக எம்.பி-க்களே நாடாளுமன்றத்தின் மாண்பையும் நாடாளுமன்ற சூழலையும் கெடுத்துள்ளதாக கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். அம்பேத்கருக்கு ஆதரவாக இருப்பதினால் எவ்வித வழக்குகளை சந்திக்க நேரிட்டாலும் மனம் தளராமல் உறுதியுடன் போராடுவோம் எனவும் அறிக்கையில் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி

MUST READ