தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களுக்கு இலாகாக்காள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் கிராம ஒன்றிய பஞ்சாயத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதி வேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்ய நாதன் சுற்றுச்சூழல் துறையை தொடர்ந்து கவனிப்பார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக எஸ். முத்துசாமிக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கே ஆர்.பெரிய கருப்பன் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் அவருக்கு தற்போது கூட்டுறவு துறையானது வழங்கப்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பனுக்கு தற்போது கூடுதலாக சாதி மற்றும் கிராம தொழில் வாரியம் மற்றும் கதர் துறையானது வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆர் காந்திக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இலாக்காக்களாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நிதி அமைச்சராக இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக மனித வளம் மற்றும் புள்ளியல் துறை கொடுக்கப்பட்டுள்ளது.