Homeசெய்திகள்அரசியல்பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு - முதலமைச்சர் திறப்பு

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவு – முதலமைச்சர் திறப்பு

-

பேராசிரியர் அன்பழகனுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திற்கு அவருடைய பெயரானது சூட்டப்படுகிறது. அதனை தொடர்ந்து பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மறைந்த திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூறாவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 43 ஆண்டுகாலம் திமுகவின் நீண்டகால பொதுச் செயலாளராகவும் தமிழ்நாடு அமைச்சரவையில் சிறந்த அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார். குறிப்பாக இரண்டு முறை தமிழ்நாட்டின் கல்வித்துறை அமைச்சராக அவர் பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டி.பி.ஐ. வளாகத்தில் அன்பழகன் சிலை நிறுவப்படும். அதுமட்டுமன்றி அன்பழகன் பெயரில் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படும் என்றும் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என இது பெயர் சூட்டப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த வழியில் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவுவை திறந்து வைத்தார்.

அது மட்டும் அல்லாமல் பேராசிரியர் சிலை நிருவப்படக்கூடிய இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். விரைவில் இந்த வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருஉருவ சிலையும் நிறுவப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர்கள் எ.வா.வேலு, துரைமுருகன், கயல்விழி செல்வராஜ், ராஜகண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

MUST READ