spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சென்னை தலைமை செயலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

-

- Advertisement -

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, கொறடா தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சட்டப்பேரவையில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை முன்னிட்டு தலைமைச் செயலக வளாகத்தில் சிறப்பு வழிபாடுடன் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

we-r-hiring

இந்நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த கிறிஸ்துமஸ் சமத்துவ கிறிஸ்துமஸாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், நிகழ்ச்சியின் முடிவில் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ