தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

திமுகவில் உள்ள 23 அணிகளின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்றைய அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி. மாணவர் அணி உள்ளிட்ட 23 அணி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துறை முருகன்,
பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் என்று 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.