spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக - ஆ.ராசா

தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக – ஆ.ராசா

-

- Advertisement -

தத்துவங்கள் சரியாக இருந்து தலைமை சரியில்லை என்றால் அந்த இயக்கம் வீழும், தத்துவமும், தலைமையும் ஒன்றாக இருக்கிறதென்றால் அது தி.மு.க தான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் என்று திமுக துணை பொதுச்செயலாளர்  ஆ.ராசா தெரிவித்தார்.தத்துவமும் தலைமையும் ஒன்றிணைந்த இயக்கம் திமுக - ஆ.ராசாதிமுக தொழிலாளர் அணி மாநில மாவட்ட மாநகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

தொழிலாளர் அணி மாநில செயலாளர் பி.டி.சி. ஜி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் திமுக தொழிலாளர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட மாநகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக தொழிலாளர் அணி கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 10,80,000 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து அதன் மூலம் 14 லட்சம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, இந்திய ஒன்றியத்தில் நம்பர் ஒன் பொருளாதார தலைநகராக மாற்றி சாதனை படைத்த தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் மக்களை இணைத்ததற்கும், இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டை பொருளாதார நகரமாக மாற்றிய மாற்றிய சாதனைக்கும், செப் 4ம் தேதி பெரியார் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்த பெரியாரின் பேரனான தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள் இடம் பெற்றன.

லண்டனில் இருந்தபோதிலும் வரிவிதிப்பால் பின்னடைவை சந்திக்கும் திருப்பூர்  தொழிலாளர்கள் நலனுக்காக ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த முதலமைச்சரின் நடவடிக்கையும் பாராட்டப்பட்டது.

இரண்டாவது முறையாக திமுக தலைவரை முதலமைச்சர் ஆக்குவோம் என்ற உறுதிமொழியும், கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தொழிலாளர் அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  இங்கு நடைபெறும் கூட்டமென்பது ஒரு பயிற்சிப் பாசறை. இங்குள்ள ஒவ்வொருவரும் ஆயிரம் பேர்களை உருவாக்க வேண்டும் என்றார். 50 பேர் பணியாற்றும் தொழிற்சாலையாக இருந்தாலும் அங்கு தி.மு.க தொழிலாளர் அமைப்பு இருக்க வேண்டும். அங்கும் நம் தி.மு.க கொடி பறக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தொழிலாளர் அணியாக இருந்தாலும், தொ.மு.ச வாக இருந்தாலும் ஒரே கொள்கை அடிப்படையில் தான் இயங்குகிறது.  கம்யூனிச இயக்கமும், ஆர்.எஸ்.எஸ்  இயக்கமும் , சுயமரியாதை இயக்கமும் ஒரே காலகட்டத்தில் தான் தொடங்கப்பட்டது.

சுயமரியாதை இயக்கமும், சுயமரியாதை தத்துவம் தான் 100 ஆண்டுகள் கடந்து இன்றும் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது.  தத்துவங்கள் சரியாக இருந்து தலைமை சரியில்லை என்றால் அந்த இயக்கம் வீழும், அதே போல தத்துவங்கள் தவறாக இருந்து தலைமை சரியாக இருந்தாலும் அந்த இயக்கம் விழும் அதற்கான சான்றுகள் வரலாற்றில் இன்றும் உள்ளது.

தத்துவமும், தலைமையும் ஒன்றாக இருக்கிறதென்றால் அது தி.மு.க தான், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் என்ற அவர், தி.மு.க ஆட்சியில் தொழிலாளர்கள் நலனுக்காக கலைஞர் அவர்கள் மேற்கொண்ட திட்டங்களையும் செயல்களையும் தி.மு.க தொழிலாளர் அணியினருடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கம்யூனிச தத்துவத்தையும் உள்ளடக்கியது தான் சுயமரியாதை இயக்க தத்துவம். தத்துவார்த்த ரீதியாக கம்யூனிச அமைப்புகள் மற்றும் தொழிலாளர்களோடு ஒன்றினைந்து வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடவேண்டும் என தி.மு.க தொழிலாளர் அணியினரை தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா கேட்டுக்கொண்டுள்ளாா்.

வாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக

MUST READ