அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும், தொகுதி பங்கீடுகூட முடிந்து விட்டாதாகவும் கூறப்படுகிறது. அதுவும் அமித்ஷாவின் இல்லத்தில்… இரவு நேரத்தில்… ஆனால், அதற்கு நேர்மாறாக அங்கு நடந்த சந்திப்பை மற்றுத்து எதற்காக அமித் ஷாவை சந்தித்ததித்தோம் என விளக்கம் அளித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளுக்காக மட்டுமே அமித்ஷாவை சந்தித்தேன்.அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நிலவுவதாக ஊடகங்களில் தான் செய்தி வெளியாகிறது. நடாளுமன்றம் மறுசீரமைப்பு குறித்தும் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம். டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்தினோம். கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்க காலம் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்தது.
இரு மொழிக்கொள்கை தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். (இந்தியை திணிக்காதீர் என அரட்டி இருப்பாரோ..?) முல்லை பெரியார் அணையை பலப்படுத்த கேரளா தடையாக இருக்கக்கூடாது என வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் போதை புழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம்.
100 நாள் வேலை திட்டம், கல்வி நிதி ஆகியவற்றை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அமித்ஷாவிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைகளை நாடாளுமன்ற அமித் ஷாவின் அலுவலகத்தில் சென்று சந்தித்து பேசி இருக்கலாம். இதைப்பேசவா அமித் ஷாவின் இல்லத்தில் இரவு நேரத்தில் அவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்டது? என பெரும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முழு பூசணியை சோற்றுக்குள் மறைக்கும் விதமாக மறைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கத்தரிக்காய் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும். பாஜகவுடனான கூட்டணியை வெளியில் சொல்வதற்கே எடப்பாடி பழனிசாமி சங்கோஜப்படுகிறாரே… பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை உள்ளூர அவ்வளவு அசிங்கமாக கருதுகிறாரா எடப்பாடி பழனிசாமி?” என பலரும் கேட்கிறார்கள்.