தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை அறிவித்த கையோடு, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களது பலத்தை நிரூபிக்க, செல்வாக்கு மிக்க தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து இந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 60 முதல் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் தங்களது பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பட்டியல்:






அதனை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, “நாங்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்கவில்லை. எங்களின் பலம் என்னவென்று மக்களுக்குத் தெரியும். குறிப்பாக தென் தமிழகத்தில் புதிய தமிழகம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளோடு தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிருஷ்ணசாமியின் இந்த அதிரடி வேட்பாளர் அறிவிப்பு மற்ற அரசியல் கட்சிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் விரிவான தேர்தல் அறிக்கை வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
