- Advertisement -
அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு
அதிமுக சட்டவிதிகளின்படி அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஒரு மனதாக தேர்வாகியிருப்பதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர், அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக, பொதுச்செயலாளராக தேர்ந்தெடுகப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர்களான அதிமுக துணைப் பொது செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளாரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டு அதற்கான வெற்றி படிவத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.