Homeசெய்திகள்அரசியல்கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

-

கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும் போராட்டத்தில் குதித்தனர். கூட்டணி கட்சிகளிடையே இந்த பிரச்னையால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். இந்த ஆலோசனையில் தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். பாஜகவுடான மோதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

MUST READ