spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன் விமர்சனம்

லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன் விமர்சனம்

-

- Advertisement -

லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை 2026 மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி  செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றிக்கு உதவி செய்ய வேண்டி தனித்த கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளாா்.லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி - டிடிவி தினகரன் விமர்சனம்

ஆளும் திமுக ஆட்சி மக்கள் விரும்பாத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியில் திமுகவிற்கு வாய்ப்பளித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.தி.மு.க.அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் கூட தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது.வேங்கை வயல் விவகாரம் துர்பாக்கிய நிகழ்வு ஆகும். இந்தியா முழுவதும் வருத்தத்தை தரும் நிகழ்வாக இருந்தது.காவல் துறை எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

we-r-hiring

சமத்துவம் சமூக நீதி, பெண் உரிமைக்காக போராடியவர் தந்தை பெரியார் அரசியல் ஆதாயம் தேடாமல் உலகம் முழுவதும் பாராட்டக்கூடியவர் அனைவரும் பின்பற்ற கூடியவர் தந்தை பெரியார். சீமான் யோசித்து பேச வேண்டும்.சீமான் சுய விளம்பரத்திற்காக பேசி வருகிறார்.தந்தை பெரியாரை தாக்கி பேச வேண்டிய அவசியமில்லை அவரை சீமான் இழிவாக பேசுவது வருத்தம் அளிக்கிறது.

சீமான் பேசுவது வீரத்திற்காண அடையாளம் கிடையாது.பெரியார் குறித்து சீமான் பேசுவது கண்டிக்கத்தக்கது.சீமான் பேசி வருவது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.நாளுக்கு நாள் அவரது பெரியாருக்கு எதிரான பேச்சு அதிகரித்து வருகிறது. தெரிந்து பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.பெரியார் குறித்து பேசுவதை சீமான் நிறுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் கடந்த ஆண்டே தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தால் ஏலமே நடந்திருக்காது. மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பாஜகவின் முழு முயற்சி மேற்கொண்டு நிறுத்தியுள்ளது. டங்ஸ்டன்  வெற்றி முழுவதும் பாஜகவை சாரும்.டங்ஸ்டன் சுரங்கம் நிறுத்தத்திற்கு  பிரதமரும் மத்திய அமைச்சர், அண்ணாமலை ஆகியோர் மட்டுமே  காரணம்.

எடப்பாடி பழனிச்சாமி  சுயநலதோடு செயல்படுகிறார். அதிமுகவை 2026 மூடுவிழா நடத்தும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி  செயல்பட்டு வருகிறார்.லாட்டரி சீட் அடித்தது போல் முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றிக்கு உதவி செய்ய வேண்டி தனித்த கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவுடன் இணைவது என்பது தொண்டர்களின் முடிவு.அதற்கான வாய்ப்பு குறைவு.ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும்  ஒரே அணியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் .தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மட்டுமல்ல எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.டங்ஸ்டன் திட்டம் அமலானால் நான் முதல்வராக தொடர மாட்டேன் என கூறும் முதல்வர்  பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுகிறார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மதக்கலாவரத்தை உருவாக்கி யாரோ குளிர்காய பார்க்கிறார்கள் காவல்துறை கவனமாக செயல்பட வேண்டும். தி.மு.க. என்ற  தீய சக்திகளை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும்.பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள்  தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும். மாநில அரசும்  உரிய  பாதுகாப்புடன் வீரர்கள்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மீண்டும் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என கூறியுள்ளாா்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் ரத்து – மதுரை மேலூர் முழுவதும் சுவரொட்டிகள்

MUST READ