spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக சீண்ட நினைத்து சூடுபட்ட எடப்பாடியார்... குறுக்கே புகுந்த செங்கோட்டையன்..!

திமுக சீண்ட நினைத்து சூடுபட்ட எடப்பாடியார்… குறுக்கே புகுந்த செங்கோட்டையன்..!

-

- Advertisement -

ஆளுங்கட்சி பட்ஜெட் விவகாரம் பேசுபொருளாக மாறும், பலரும் அதிருப்தி தெரிவிப்பார்கள். அதனை மக்களிடம் கொண்டு சென்று திமுகவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்த்தால் நமது கட்சி கதைதான் எல்லா இடத்திலும் ஓடுகிறது என்று அப்செட் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

we-r-hiring

தமிழக அரசு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டிவி விவாதங்கள், யூடியூப் சேனல்கள், மக்கள் மன்றம் என ஆளும் கட்சி பட்ஜெட் உரையில் உள்ள நிறை,குறைகள் என்ன என்று விவாதிப்பார்கள். ஆளுங்கட்சியை அம்பலப்படுத்தலாம் என்று அதிமுக திட்டமிட்டு இருந்தது.

ஆனால் அந்த மூன்று நாட்களுமே செங்கோட்டையன் பற்றிய மேட்டரே அதிகளவில் வெளியில் பேசப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகவும் அப்சட் ஆகிப் போயுள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று வாய்மொழியாக தடை விதித்திருந்ததால் ஆணித்தரமான கருத்துக்களை வைக்க முடியாமல் இருப்பதே அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக மாறுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ரிப்போர்ட் போய் இருக்கிறது.

உடனே கட்சி செய்தி தொடர்பாளர்கள் மட்டுமின்றி நல்லா பேசத் தெரிந்த எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் என எல்லா தரப்பினரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று நமது தரப்பு நியாயங்கள், அரசு மீதான விமர்சனங்களையும் எடுத்துச் சொல்லுங்கள் என உத்தரவு போட்டு இருக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அதிமுகவினர்.

MUST READ