Homeசெய்திகள்அரசியல்எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு - முன்னாள் அமைச்சர் தங்கமணி

எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு – முன்னாள் அமைச்சர் தங்கமணி

-

- Advertisement -
kadalkanni

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும் -முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டிஎடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு - முன்னாள் அமைச்சர் தங்கமணி

மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை முடக்குவதாகவும் சாலைகளை சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை தாமதப்படுத்துவதாகவும், கனிம வளம் கடத்தப்படுவதாகவும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குறிப்பிடுகையில்: விலைவாசி உயர்வுக்காக ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தி விட்டோம். தற்போது மதுரையில் குடிநீர் திட்டத்தை அதிமுக கொண்டுவந்த காரணத்திற்காக நிறுத்தி விட்டார்கள். உடனடியாக குடிநீரை வழங்கும்  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வைகை தென்கரை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அதிமுக ஆட்சியின் போது நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. அதையும் நிறைவேற்ற வேண்டும். சாலை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது அதை சீரமைக்க வேண்டும்.

அதேபோல மதுரையில் வண்டல் மண் கடத்தப்படுகிறது. இதை அனைத்தையும் சரி செய்வதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். சென்னையில் இரண்டாம், மூன்றாம் கட்டமாக மெட்ரோ ரயில் வேலை நடைபெறுகிறது, கோயம்புத்தூரில் தயாராகிவிட்டது. ஆனால் மதுரையில் இன்னும் எந்த வேலையும் நடைபெறவில்லை. எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும். மதுரையில் தொழில் பூங்கா வரும் என நிதியமைச்சர் கூறினார் அதுவும் வரவில்லை.

திருப்பரங்குன்றத்திற்கு விளையாட்டு அரங்கம் கேட்டோம் துணை முதல்வர் அனைத்து தொகுதிக்கும் வரும் என கூறினார். ஆனால் எந்த தொகுதிக்கும் விளையாட்டு அரங்கங்கள் வரவில்லை. மதுரைக்கு இரண்டு திட்டங்களை கொண்டு வந்ததாக சொல்கிறார். ஒன்று வாடிவாசல் இல்லாத ஜல்லிக்கட்டு அரங்கம். மற்றொன்று கலைஞர் பெயரில் உள்ள நூலகம். நூலகத்தில் உள்ள எஸ்கலேட்டரில் குழந்தைகள் ஏரி விளையாடுகிறார்கள் அதற்கு தான் அந்த நூலகம் பயன்படுகிறது என்றாா்.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி குறிப்பிடுகையில்: நகை கடன் தள்ளுபடி என கூறினார்கள் ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக் கூறினார்கள். 52% மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள்.

இந்த அரசின் இரண்டு சாதனைகள் இன்று கள்ளச்சாராயம். அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் ஒருவர் கூட இறக்கவில்லை. திமுக ஆட்சியில் முதலில் நடைபெற்ற கள்ளச்சாராயம் போது 10லட்சம் கொடுத்துவிட்டு இனிமேல் தமிழகத்தில் ஒரு கள்ளச்சாராய சாவு கூட நடக்காது என்று கூறினார். ஒரு ஆண்டு கழித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே நீதிமன்றத்திற்கு பின்பு 67 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து விட்டார்கள்.

மற்றொரு சாதனை தமிழகமே போதை பொருளால் மிதந்து கொண்டிருக்கிறது. காவல்துறையால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு 15 வயது மாணவன் கூட போதைக்கு அடிமையாகி காவலரை தாக்கக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கின்றோம்.

1980 இல் பாராளுமன்ற தேர்தலின் போது இரண்டு தொகுதியில் தான் வெற்றி பெற்றோம். கலைஞர் இந்திரா காந்தியிடம் சொல்லி ஆட்சியை கலைத்தார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் என்பது ஒவ்வொரு தொகுதியாக சென்று செய்தேன் என்று புரட்சித்தலைவர் மக்களிடம் பேசினார். அந்த தேர்தலின் முடிவில் அதற்கு முந்தைய தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றோம் அதே போல் வருகின்ற தேர்தலிலும் நடக்கும் எனக் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறுகையில்: இந்த அரசு கடந்த மூன்று அரை ஆண்டுகளில் இந்த பகுதி எதுவும் செய்யவில்லை. பாதாள சாக்கடை திட்டங்கள் உட்பட அடிப்படை திட்டங்கள் எதுவுமே செயல்படவில்லை. அதனை உடனடியாக செயல்பட வேண்டும் இந்தப் பகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்தும் செயல்படுத்தவில்லை அதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். வெயில் மழை பார்க்காமல் மக்கள் பங்கேற்றுள்ளார்கள். 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு மக்கள் பங்கேற்றனர்.

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு: அதை முதல்வரின் ஆசை ஆனால் அதை நிறைவேற்ற போவது அதிமுக தான்.கட்சிப் பிரிந்துள்ள நிலையில் வெற்றிக்கான சாத்தியக்கூறு குறித்த கேள்விக்கு:  நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும். கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார்.

மக்களின் முக மலர்ச்சியை இந்த ஆட்சிக்கு சாட்சியை என முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு: பின் எதற்காக ஆறு சதவீத வாக்கு குறைந்தது. எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு எனக் கூறினார்.

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் – கே. பாலகிருஷ்ணன்

MUST READ