spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் - கே....

ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் – கே. பாலகிருஷ்ணன்

-

- Advertisement -

தமிழக ஆளுநர் மீண்டும் மீண்டும் திருவள்ளுவரை மட்டுமல்ல , தமிழ் சமுதாயத்தை களங்கப்படுத்தி வருகிறார் , அவரது பதவிக்காலம் முடிந்தும் ,இன்னும் நீடித்திருப்பது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயலாகும் , ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமங்கலத்தில் சிபிஎம் 24 ஆவது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி.ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் நீடிக்க வைப்பது தமிழர்களை அவமானப் படுத்தும் செயல் - கே. பாலகிருஷ்ணன்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் 24வது மாநில மாநாடு நடைபெற்றது . இம் மாநாட்டில் கட்சியின், மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார் மேலும் இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பங்கேற்றார். இதனை தொடர்ந்து , கே. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,

we-r-hiring

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ஜேவிபி என்ற கட்சி தலைவர் ஜனாதிபதி இருந்த தலைவர், அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவில் 160 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிங்களப்பகுதிகளில் சிங்கள கட்சிகளும், தமிழக பகுதிகளில் தமிழ் கட்சிகள் வெற்றி பெறுவது வாடிக்கை. இப்போது மக்கள் சக்தி கூட்டணி என்ற ஜேவிபி  கட்சியானது சிங்களப் பகுதி மக்களிடம் அதிக இடங்களை பெற்றுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக தமிழ்மக்களிடமும்  அதிக வாக்குகளைப் பெற்று புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர், சிங்களர் என்று பாகுபாடுகளை சுமுகமான உறவு ஏற்படும் வகையில்  தேர்தல் அமைந்துள்ளது .

இலங்கையில் கடற் பகுதியில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு, அச்சுறுத்தல் செய்து இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார்.

நேற்றைய தினம் கைலாசநாத பட்டி என்ற கிராமத்தில் , கோயிலில் இருக்கக்கூடிய பூசாரி சந்தேகமான முறையில் மரணமடைந்ததற்கு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் – ன் சகோதரர் ஓ.பி. ராஜா உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. அரசு  இந்த வழக்கினை மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் , நீதி கிடைக்க உரிய விசாரணை நடத்த வேண்டும்.

ஆளுநர் ரவி வழக்கம் போல் சொன்னதையே செய்து வருகிறார். அவர் திருந்த மாட்டார், ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் விழாவிற்கு திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவி உடை போட்டு இருப்பது மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது .திருவள்ளுவர், கபீர் தாசர், அபிநயா என்கிற மூன்று நிபுணர்களுடைய எழுத்தாளர்கள் பகுதியாக உள்ளது. அதில் போய் காவி உடையை திருவள்ளுவரை அணிய செய்திருப்பது, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது.

பிஜேபி அரசாங்கத்தினுடைய மோசமான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆளுநரின்  காலம் முடிந்த பின்பும் , இன்னும் பதவியை விட்டு செல்ல மறுக்கிறார் .அவர் மேலும் மேலும் காவி அரசியலை செய்து வருகிறார். உடனடியாக ஒன்றிய அரசு அவரை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் . மோடி அரசாங்கத்தால் நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. புல்டோசர் கலாச்சாரம் எவ்வளவு மோசமான கலாச்சாரம் , அதுவும் அரசியல் கலாச்சாரத்தை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது.மோடி அரசு வேண்டாதவர்களையும், இஸ்லாமியர்களையும் குறி வைத்து அவர்களுடைய கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவது என்பது மோசமான செயலாகும்.

ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் – ஆளுநர்

தமிழக அரசு ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு பத்தாண்டுகளாக வேலை வழங்கவில்லை. மேலும் பல பள்ளிகளில் காலி இருப்பிடம் நிறைய உள்ளது .அதை நிரப்புவதற்கு உண்டான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகள் மட்டுமல்ல, அரசு அலுவலர்கள், மருத்துவமனையில் செவிலியர்கள் உட்பட அனைத்து காலி இடங்களிலும் தமிழக அரசு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

MUST READ