spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்

அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்

-

- Advertisement -

அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

jayakumar

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற, செயல்களை ஊக்கப்படுத்தாமல் அவர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாது என நம்புகிறோம். அதிமுக பாஜக இடையே மோதல் இல்லை. இந்தியா அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது குறித்து, தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும்.நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி முழுமையாக தடை செய்ய வேண்டும். இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆளுநர் கேள்விக்கு 24 மணி நேரத்தில் பதில் அளித்து உள்ளோம் என அரசு கூறுகிறது. அரசு சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து மீண்டும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

MUST READ