spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அழகிய பெட்டியில் அடுக்கப்பட்ட பரிசுகள்.. அசத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்...! 

அழகிய பெட்டியில் அடுக்கப்பட்ட பரிசுகள்.. அசத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! 

-

- Advertisement -

தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 7  மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.

we-r-hiring

முதல்வரின் அழைப்பை ஏற்று அனைவரும் இந்த நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.கேரளா முதல்வர் பினராய் விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.பொன்னண்ணா ஆகியோரும், ஆந்தராவில் இருந்துருந்து ஒய்ஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிதுன் ரெட்டி, ஜனசேனா கட்சியின் உதய் சீரீனிவாஸ் ஆகியோரும் கூட்டத்திற்கு வந்துள்ளனர். தெலங்கானாவில் இருந்து முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குண்ட், பாரதிய ராஷ்ட்ரிய சமிதியின் கே டி.டி ராமராவ், பி வினோத்குமார், ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த ஈத்தியாஸ் ஜலீல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஒடிசாவில் இருந்து பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த சஞ்சய குமார் தாஸ், அமர் பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் பக்த சரண்தாஸ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலத்தில் இருந்து  முதலமைச்சர் பகவந்த்மான், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் சிரோமணி, அகாளிதளம் கட்சியின் தல்ஜித் சிங் சீமா மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் முதலே பல்வேறு அரசு கட்சித் தலைவர்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். முதன்முதலாக கேரள முதல்வர் பினராய் விஜயன்தான் சென்னைக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பஞ்சாப் முதல்வர் மற்றும் தெலுங்கானா முதல்வர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்னை வந்தடைந்தனர்.

இதனிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் பரிசுப்பெட்டகம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகியவை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளன.

MUST READ