spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு

தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு

-

- Advertisement -

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு செய்துள்ளாா்.தண்டனையை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு

கடந்த 2018ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என  டுவிட்டரில் பதிவிட்டதாகவும், திமுக எம்.பி.கனிமொழிக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும், பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாபுலர் பிராண்ட் ஆப் இந்தியா சாரிபில்  புகா் அளிக்கப்டடது.

we-r-hiring

இதனை அடுத்து வழக்கு  விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைப்பெற்றது.  ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. ஹெச். ராஜா கருத்து பதிவு செய்யவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. எனவே, இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஹெச். ராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் தண்டனையை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை என்றும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும் பதியப்பட்ட வழக்கு நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாத நிலையில் விசாரித்த நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது என எச்.ராஜா மேல்முறையீடு செய்துள்ளாா்.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது… விரைந்து வரும் தேனி போலீஸ்..!

MUST READ