Homeசெய்திகள்அரசியல்இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

-

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும், மே 7 ஆம் தேதி 3 ஆம் கட்டமாக 94 தொகுதிகளுக்கும், மே 13 ஆம் தேதி 4 ஆம் கட்டமாக 96 தொகுதிகளுக்கும், மே 20 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 49 தொகுதிகளுக்கும், மே 25 ஆம் தேதி 6 ஆம் கட்டமாக 58 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

அதனை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் NDA கூட்டணி ஒரு அணியாகவும் காங்கிரஸ் தலைமையில் INDIA கூட்டணி மற்றோரு அணியாகவும் களத்தில் போட்டியிட்டு வருகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் அதிமுக, ஆந்திராவில் YSR காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் (BJD) போன்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு சாதகமாக உள்ளது என்று நாடு முழுவதும் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் NDA கூட்டணி 20 தொகுதிகளையும், INDIA கூட்டணி 09 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளன.

குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தபட்டிருக்கிறது. அதில் NDA கூட்டணி 22 தொகுதிகளையும், INDIA கூட்டணி 04 தொகுதிகளையும் பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் NDA கூட்டணி 15 தொகுதிகளையும், INDIA கூட்டணிக்கு 10 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒரிசா மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளில் NDA கூட்டணி 04 தொகுதிகளையும், INDIA கூட்டணிக்கு 06 தொகுதிகளும், மாற்றவை (BJD) 11 தொகுதிகளையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 07,  INDIA கூட்டணிக்கு 07 தொகுதிகள் என்ற சமபலத்துடன் உள்ளன.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் NDA கூட்டணி 01 தொகுதிகளையும், INDIA கூட்டணிக்கு 10 தொகுதிகளும், மாற்றவை சிரோமணி அகாலி தளம் (SAD) 02 தொகுதிகளையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 மக்களவைத் தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் நேரடிப் போட்டி நிலவுகிறது. அங்கு NDA கூட்டணி 06, INDIA கூட்டணி 05 தொகுதிகள் என இங்கும் அங்குமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் NDA கூட்டணி 04 தொகுதிகளையும், INDIA கூட்டணி 06 தொகுதிகளை தழுவ வாய்ப்புள்ளது.

டெல்லி மாநிலத்தில் உள்ள 07 தொகுதிகளில் NDA கூட்டணி 02 தொகுதிகளையும், INDIA கூட்டணிக்கு 05 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதகாவும் ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளில் NDA கூட்டணி 02 தொகுதிகளையும், INDIA கூட்டணி 04 தொகுதிகளையும் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள 05 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 03, INDIA கூட்டணிக்கு 02 தொகுதிகள் என்றும் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 04 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 02,  INDIA கூட்டணிக்கு 02 தொகுதிகள் என்ற சமபலத்துடன் உள்ளன.

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் NDA மற்றும் INDIA கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அதில் NDA கூட்டணி 50 தொகுதிகளையும், INDIA கூட்டணி 30 தொகுதிகளையும் பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் இரு கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினை குழப்பங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தல் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் நடந்துள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து தற்போது இரண்டு சிவசேனா மற்றும் இரண்டு என்சிபி என நான்கு கட்சிகள் உள்ளன. அதில் NDA கூட்டணி 17 தொகுதிகளையும், INDIA கூட்டணி 29 தொகுதிகளையும், மற்றவை 02 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புகள் சாதகமாக உள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் NDA கூட்டணி 15 தொகுதிகளையும், திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 22 தொகுதியும், INDIA கூட்டணிக்கு 18 தொகுதியும் என வாய்ப்புகள் உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதியில் NDA கூட்டணியும் INDIA கூட்டணியும் சம வெற்றி வாய்ப்புடன் உள்ளது.

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 01(PMK) தொகுதியும், INDIA கூட்டணிக்கு 38 தொகுதிகளையும் கைப்பற்ற உள்ளது. ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 10 தொகுதிகளும், INDIA கூட்டணிக்கு 01 தொகுதியும், மற்றவை 14 (YSRC) தொகுதிகளையும் வெற்ற பெற வாய்ப்பு உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் NDA கூட்டணிக்கு 06 தொகுதிகளும், INDIA கூட்டணிக்கு 11 தொகுதிகளும் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் NDA கூட்டணி 09 தொகுதிகளையும், INDIA கூட்டணி 19 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கேரளா மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தெகுதிகளில் NDA கூட்டணிக்கு (00) இடமில்லை மேலும் இடது ஜனநாயக முன்னணி (LDF) 12 தொகுதிகளும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு(UDF) 08 தொகுதிகள் என்று மொத்தம் INDIA கூட்டணிக்கு 20 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கோவா, திரிபுர, மேகாலயா, அருணாசலம் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகள் உள்ளன. அதில் NDA கூட்டணியும் INDIA கூட்டணியும் தலா 01 தொகுதி சம வெற்றி வாய்ப்புடன் காணப்படுகிறது.

இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை?

சிக்கிம், பாண்டிச்சேரியில் உள்ள தலா 1 தொகுதியில் NDA கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் INDIA கூட்டணிக்கு அங்கு இடமில்லை என்று தெரிகிறது.

தாதா -நகர்வேலி உள்ள 2 தொகுதியில் NDA கூட்டணி 02 தொகுதிகளையும் கைப்பற்றவும் அங்கு INDIA கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதனை தொடர்ந்து மணிப்பூரில் உள்ள 2 தொகுதியில் INDIA கூட்டணி 02 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றியை தட்டி செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் NDA கூட்டணிக்கு இடமில்லை என்று தெரிகிறது.

நாகலாந்து,  மிசோரம், அந்தமான், லட்சத்தீவு, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள தலா 1 தொகுதியில் INDIA கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அங்கு NDA கூட்டணிக்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 𝗡𝗗𝗔 கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து 𝗜𝗡𝗗𝗜𝗔 கூட்டணி 254 தொகுதிகளை பிடிக்கும் என்றும் மற்றவை 56 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புகள் இருக்கிறது.

நாம் ஜூன் 4 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

MUST READ