spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கோபமாக கொந்தளித்தால்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது - த.வெ.க தலைவர் விஜய்

கோபமாக கொந்தளித்தால்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது – த.வெ.க தலைவர் விஜய்

-

- Advertisement -

கோபமாக கொந்தளித்தால்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது - த.வெ.க தலைவர் விஜய்விஜயின் த.வெ.க முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டில் உள்ள வி. சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பேசிய விஜய், ”அரசியலை கண்டு எனக்கு பயமில்லை என்றும் முதன்முதலில் அம்மா என்று அழைக்கும் குழந்தை முன்பு பாம்பு வந்து நின்றால் எப்படி இருக்குமோ அதுதான் அரசியல் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார்.

ஏற்கெனவே உள்ள அரசியல்வாதிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, அதேநேரம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கவும் போவதில்லை. கோபமாக கொந்தளித்தால்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது. அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா? அரசியலும் மாற வேண்டும்” என்று பேசியுள்ளார்.

MUST READ