spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தலில் மீண்டும் திமுக ஜெயித்தால்...சீமான் இப்படியும் பல்டி அடிக்க வாய்ப்புண்டு..!

2026 தேர்தலில் மீண்டும் திமுக ஜெயித்தால்…சீமான் இப்படியும் பல்டி அடிக்க வாய்ப்புண்டு..!

-

- Advertisement -

திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷமாக பொங்கி வரும் நாம் தமிழர் தலைமை ஒருங்கீணைப்பாளர் சீமான், 2026ல் மீண்டும் திமுக வெற்றி பெற்றால் தனது கொள்கையை கீழே உள்ளவாறு மாற்றிக் கொள்வார் என பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

அதில், ”ஆரியம்னா என்ன? அதனால் நாட்டுக்கு வடந்த நன்மைகள் என்ன? யாராச்சும் சொல்லுங்க? தம்பி..உங்களைத்தான். பதில் இருக்கா தம்பி? காலைலயே கடுப்பை கெளப்பாதீங்க. வெறியாகிடுவேன். சாவர்க்கர் மட்டும்தான் ஜெயிலுக்கு போனாரா? அவரும் ஜெயிலுக்கு போனார்னு சொல்லு.என் ஆருயிர் தலைவன் பொரியார் செய்யாத தியாகமா? அவர் பாக்காத ஜெயிலா? சும்மா பேசனும்னு பேசிட்டு இருக்க கூடாது.

we-r-hiring

சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

ஐயா ரஜினியை பாத்து சிகரெட் புடிச்சி கெட்டவங்க எத்தனை பேரு? இதுதான் பொறுப்புள்ள நடிகருக்கு அழகா? தேர்தலுக்கு முன்னாடி அன்புத்தம்பி உதயநிதியை திட்டுனேன். ஆனா போனவாரம் OTTல நெஞ்சுக்கு நீதி படம் பார்த்ததும் தெளிஞ்சிட்டேன். வாரிசு அரசியலுக்கும், அவருக்கும் என்ன சம்மந்தம்? மக்கள்கிட்ட ஓட்டுவாங்கி ஜனநாயக முறைப்படிதானே ஜெயிச்சாரு? அதுல என்ன தப்பை கண்டுட்ட? அமித் ஷா மகன் ஜெய் ஷா BCCI, ICC தலைவர் ஆனது எப்படி? பதில் இருக்கா‌ தம்பி?ராகுல் காந்தியை விட ஒரு சமத்துவ போராளி நாட்ல உண்டா தம்பி?

பொங்கல் லீவுகளுக்கு நடுவுல வர்ற வேலை நாளை விடுமுறையா அறிவிச்ச பெருந்திராவிடர் ஐயா ஸ்டாலின். இந்த யோசனையை முதலில் சொன்னவன் இந்த செந்தமிழன். அதோ அங்கு இருக்கிறதே.. அது மோடி, பாதை, பக்கத்தில் அமித் ஷா பாதை, அதனருகே அதானி பாதை, அடுத்து உள்ளது அம்பானி பாதை.கடைசியில் இருப்பது ஏதோ ஒரு பாதை. அது நிச்சயம் நல்ல பாதையா இருக்காது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஆனால்.. நடுவில் இருக்கிறதே.. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா பாதை. அதுதான் சமூக நீதிப்பாதை. சுயமரியாதை பாதை. ஓய்வுக்கே ஓய்வளித்த பாதை. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல்திருநாடு என்று இருந்தால் என்னஸதவறு? தங்கச்சி? ராகுல் திராவிட் என்று இருந்தால்தானே தவறு?தம்பி அண்ணாமலை.. நீ பனங்காட்டு நரி என்றால்.. அந்த பனங்காடே நான்தான். அச்சம் என்பது மடமையடா. அஞ்சாமை திராவிடர் உடமையடான்னு பாடுன பெரியப்பா எம்.ஜி.ஆர். வழி பிள்ளைகள் நாங்க.

என் தம்பி வடிவேலு ஒரு படத்துல சொன்ன மாதிரி.. ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்புடற மாதிரி தங்கச்சி.
கலைஞருக்கு பேனா சிலை வச்சா.. உன்னால என்ன செய்ய முடியும்? என்னை மீறி அந்த பேனாவை தொட்டுருவியா? நாம் திராவிடர். நாம் திராவிடர் என்றே முரசுரைப்போம்” என பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ் தளப்பதிவில் பகிர்ந்துள்ளார்.

MUST READ