இந்தியா தனது சொந்த எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டால் மட்டுமே உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற முடியும். நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான ஈனாம் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணீஷ் சோகானி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பயோடெக் போன்ற துறைகளில் பின்தங்கியிருப்பதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்க நேரிடும் என்றும் சோகானி ஒரு பேட்டியில் எச்சரித்துள்ளார். ‘‘அடுத்த 5-10 ஆண்டுகளில் எரிசக்தி ஆற்றல், தொழில்நுட்பம், பயோடெக் ஆகியவற்றில் 10% முதலீடு இல்லாத நாடுகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.’’ என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காரணம், இந்தத்துறைகள் மட்டுமே அபரீதமான மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன.
சோகானி ஆற்றல் மாற்றத்தை மனித உடலை இயக்கும் ‘பேஸ்மேக்கர்’ என்று விவரித்துள்ளார். நமது எரிசக்தித் தேவைக்காக வேறொருவரைச் சார்ந்து இருந்தால் நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற முடியாது’ என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, எண்ணெய் கண்டுபிடிப்பு எப்படி அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்கியது என்பதையும் மேற்கோள் காடியுள்ளார். எரிசக்தி பங்குகளை வாங்குவதன் மூலமும் சோலார், லித்தியம், பேட்டரிகளில் முதலீடு செய்வதன் மூலமும் எதிர்காலத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்ட சீனாவின் உத்தியையும் அவர் பாராட்டினார்.
‘எரிசக்தி துறையில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்றால், அது பெரிய பிரச்னையாகிவிடும்’ என சோகானி கூறியுள்ளார். இந்தியா மறந்துவிட்ட தொழில் புரட்சியை உதாரணம் காட்டிய அவர், ஏஐ புரட்சியில் இந்தியா பின்தங்கினால், இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்கிற இலக்கை அடைய முடியாது’’ என்று சோகானி அடித்துச் சொல்கிறார்.
ஏஐ, செமிகண்டக்டர், பயோடெக் மற்றும் எரிசக்தி ஆற்றல் போன்ற துறைகளில் கவனம் செலுத்துமாறு இந்தியாவுக்கு சோகானி அறிவுறுத்தியுள்ளார். ‘‘இந்தத் துறைகளில் இந்தியா 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது. மிக விரைவாக முன்னேற வேண்டும். பெரிய நுகர்வோர் ஹைட்ரஜனைப் பயன்படுத்த வேண்டும். சிறிய நுகர்வோர் லித்தியம் பயன்படுத்த வேண்டும். அத்துடன் பெரும்பாலான வீடுகள் சூரிய சக்தியைப் பயன்படுத்த வேண்டும்.
இதில் 10% முதலீடு செய்யவில்லை என்றால் கூட, 5-10 ஆண்டுகளாக உங்களை நீங்களே காயப்படுத்துகிறீர்கள். இருப்பினும், இந்தத் துறைகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்தியா பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
டாடா பவர், அதானி, ரிலையன்ஸ் மற்றும் ஜிண்டால் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆற்றல் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன, முதலீட்டாளர்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தற்போது வங்கி, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, பயன்பாடுகள், பொருட்கள், நுகர்வோர் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் அதிக லாபம் ஈட்டுகின்றன.
இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.நமது ஐடி நிறுவனங்கள் இன்னும் பழைய ஐபிஎம்களைப் போலவே உள்ளன. அமேசான், என்விடியா, ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் போல் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்திய ஐடி துறையில் இந்த மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வரவேண்டும். இந்திய மருந்து நிறுவனங்களும் பயோடெக் துறையிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ளப் போகின்றன.