மன்னார்குடி மாவட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
இவர், கட்சி பணிகள் எதையும் கண்டுகொள்வதில்லை. தலைமை சொல்லக்கூடிய பணிகளை கூட இவர் செய்வதில்லை. தேர்தல் தொடர் தோல்வி, அதிமுகவை மீட்பதிலும் தோல்வி.. இதற்கு இடையில், கட்சியில் இருந்து வரும் மாவட்ட செயலாளர், 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை. மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை முன் வைத்தாலும் எதையும் காது கொடுத்து மாவட்ட செயலாளர் கேட்பதில்லை. இதுதொடர்பாக தலைமைக்கு புகார் அனுப்பியும் டிடிவி.தினகரன் கண்டுகொள்வதில்லை.
இதனால் அவர் மீது கடும் அதிருப்தியில் குக்குராக பொங்குகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். நாளுக்கு நாள் அவமானப்பட்டு இவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் கீழ்மட்ட நிர்வாகிகளை கண்டுகொள்ள மறுக்கின்றனர். இனியும் டி.டி.வி.தினகரனை நம்பி இருந்தால் கட்சியில் அவமானம் மட்டுமல்ல நடுத்தெருவுக்கு தான் வரவேண்டியிருக்கும். இதனால் மாற்று கட்சிக்கு சென்று விடலாம் என அவர்களுக்குள் பேசி முடிவு எடுத்துள்ளார்கள்.