spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுகவின் குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு – கமல ஹாசனின் நச் பதில்!

திமுகவின் குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு – கமல ஹாசனின் நச் பதில்!

-

- Advertisement -

திமுக விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பிய கமல் திரும்பி வந்து சொன்ன பதில்.

we-r-hiring

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் அளித்த பேட்டி: முதல்வர் அழைத்தன் பெயரில் சந்தித்தேன். ராஜ்யசபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சியிடம் சொல்லியிருக்கிறார். நாங்கள் அதற்கான ஏற்பாடுகளையும், தேவையான தஸ்தாவேஜ்களையும் தயார் செய்து வைக்க வேண்டும் என்பதற்கான அறிவுரையையும் வழங்கியுள்ளாா்.

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினாா். தான் பேசியதில் தவறு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக கூறிய கமல், என்னுடைய அன்பு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மக்களுக்கு புரியும்,” என் உருக்கமாக தெரிவித்தார்.

“ஏற்கெனவே நான் பல மிரட்டல்களை சந்தித்துள்ளேன், இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது.” என்று கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதனை தொடர்ந்து திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் அளிக்காமல் கிளம்பிய கமல் திரும்பி வந்து சொன்ன பதில், ”நாட்டுக்கு தேவை அதனால் வந்திருக்கிறேன்” என இவ்வாறு அவர் பேசினார்.

வசூலில் மட்டுமல்ல அந்த விஷயத்திலும் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி!

MUST READ