கர்நாடக மாநிலத்தில் 3 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது . இரண்டு முன்னாள் முதல்வர்களின் மகன்களும் பின்னடைவில் இருந்து வருகின்றனர்.
ராம் நகர் மாவட்டம் சென்னபட்டனா தொகுதியில் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தொடர்ந்து தோல்வி முகத்தில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் சி பி யோகேஸ்வர் 21,966 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் பெற்று வருகிறார்.
சந்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் அண்ணபூர்னா 8,881 வாக்குகள் வித்யாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
சிங்காவி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை காங்கிரஸ் வேட்பாளர் பதானிடம் 12,251 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு பெற்று வருகிறார்.
வயநாட்டில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!