spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நல்லகண்ணு சூரியனை 100 முறை சுற்றி வந்துள்ளார் - கவிஞர் வைரமுத்து புகழாரம்

நல்லகண்ணு சூரியனை 100 முறை சுற்றி வந்துள்ளார் – கவிஞர் வைரமுத்து புகழாரம்

-

- Advertisement -

சூரியனை 100 முறை சுற்றி வந்திருக்கிற ஒரே பெருமகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நல்லகண்ணு மட்டும்தான் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்தினார்.

இந்த பூமியில் 100 முறை சூரியனை சுற்றி வந்தார். பூமி என்னும் ஊடகத்தின் மீது நின்று கொண்டு அவரும் சூரியனை 100 முறை சுற்றி வந்திருக்கிறார்.. நான் 70 முறை சுற்றி வந்திருக்கிறேன். சிலர் 80 முறை சுற்றி வந்திருக்கிறார்கள்.. சிலர் 50 முறை, சிலர் 40 முறை ஆனால் 100 முறை சுற்றி வர கூடிய வாய்ப்பு நல்லகண்ணு அய்யா அவர்களை போல எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை..

we-r-hiring

நீங்கள் ஒருவரை வாழ்த்தும் பொழுது நூறாண்டு வாழ்க என்று கூறுவீர்கள். இவரை எப்படி வாழ்த்துவீர்கள். நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள் என்று வாழ்த்துங்கள்.

எளிமையில் பிறந்து எளிமையின் வாழ்ந்து வருபவர். எளிமை தான் இந்த உலகில் எளிமையானது. ஆடம்பரம் இல்லாத சொல் எளிமை. உலகத்தில் முக்கியமான பொருள் காற்று என்றால் அது தான் இந்த உலகில் எளிமையானது.

தன்னலம் மறுப்பு பொதுநல பொறுப்பு மூலம் வளர்ந்தவர். ஒருவன் இறந்தால் நான்கு மணி நேரம் தான்‌ பேசப்படும்.

நன்றியை புகழை எதிர்பார்க்காத மனிதன் தான் மகத்தானவன்.

இந்த உலகத்தில் மிக கொண்டாடிக் கூடிய பொருள் என்ன தெரியுமா ? எது தியாகம் செய்ததோ அதுதான் இன்றளவிற்கும் நிலைத்து நிற்கும் பாத்திரம். தன் தியாகத்தை மறந்து தன்னை சராசரி மனிதனாக காட்டி கொள்வபவர் நல்லகண்ணு…

1967 ல் கம்யூனிஸ்ட் தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் தான் ஆட்சியை கைப்பற்றி இருக்கும்.

நூறாண்ணு வாழ்வது என்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ? கணையம் கல்லீரல் செயல்பட வேண்டும்; குடும்பத்தில் உள்ளோர் சாகாமல் இருக்க வேண்டும்; நூறாண்டுவரை உலகம் நம்மோடு இணைந்து இருக்க வேண்டும்

நல்லகண்ணு அவர்களே… தோழர்கள் இருக்கிறார்கள். சமூகம் இருக்கிறது. வாழுங்கள். நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள். இந்த சமூகம் எவ்வளவு வாழுமோ அவ்வளவு வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்…

MUST READ