spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்'கொங்கு ஆபரேஷன்’ ஸ்டார்ட்... கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் அதிரடி ரெய்டு..!

‘கொங்கு ஆபரேஷன்’ ஸ்டார்ட்… கோவை அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் அதிரடி ரெய்டு..!

-

- Advertisement -

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய உறவு இருக்கிறது என டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கூறிவந்த நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியைக் காட்டியிருக்கின்றனர்.

we-r-hiring

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அ.தி.மு.க.,வில் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், தன் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி அவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் 2 கோடிக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கூடுதலாக குவித்துள்ளதாக அர்ஜுனன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

இது, அவரது வருவாயைக் காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். இதற்கிடையே, கோவையில் இன்று காலை முதல் அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சோதனை மேற்கொண்டு வரக்கூடிய அம்மன் அர்ஜுனன் வீட்டில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என குவிய தொடங்கியுள்ளனர். அதேபோல அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தனர் .

MUST READ