Homeசெய்திகள்அரசியல்மகாராஷ்டிரா மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

மகாராஷ்டிரா மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

-

- Advertisement -

மகாரஷ்டிராவில் பாஜக மீதும் பிரதமர் மோடியின் திட்டங்களின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளது போல் தமிழக மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

மகாராஷ்டிராவில் பாஜக வெற்றியை தொடர்ந்து  தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்  முன்னிலையில் நிர்வாகிகள்  பட்டாசு வெடித்து கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், முதலில் இரண்டு மாநில மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், இதில் பெரிய மாநிலமான மகாராஷ்டிராவில் பாஜக  கூட்டணியில் ஆட்சி இறுதி பெரும்பான்மையுடன் நடக்க இருக்கன்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களில் இருந்து ஒரு வேறுபட்ட மாநிலம் பாரத தேசத்தில் உள்ள அனைத்து மக்களும் அங்கே பணிபுரிபவர்கள்,வசிப்பவர்கள். எனவே மகாராஷ்டிராவை ஒரு சின்ன பாரத தேசம் என்றே கூட சொல்லலாம். மகாராஷ்டிராவில் பாரதிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி பாரத தேசம் முழுவதும் உள்ள கருத்து என்று எடுத்து கொள்ளலாம்.மகாராஷ்டிரா வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என்பதை  நாங்கள் பதிவு செய்கிறோம். பிரதமரின் திட்டங்களும் மாநில அரசின் திட்டங்களும் டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருந்தால்

மக்களுக்கு எப்படி பலன் தரும் என்பதை மகாராஷ்டிராவில் மீண்டும் வெற்றியை பெற்று இருக்கிறோம். ராகுல் காந்தியின் பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கு முற்றிலுமாக தோல்வியை தந்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவின் வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிக்கு ஆதரவு தரும் குறியீடாக பார்க்கிறேன் . ஜார்க்கண்டில் கடந்த முறை 24 இடங்களை வென்ற நிலையில் தற்போது 29 தொகுதிகளுக்கு அதிகமாக வாக்குகளைப் பெற்றுள்ளதால்  ஜார்கண்டிலும் பாஜக வெற்றி பெற்றதாகதான் பார்க்க வேண்டும். ஜார்க்கண்டில் ஊழல் மலிந்துள்ளது என்றும் முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுகிறார் ஊழல் வழக்கினால் அவர் கைதானது அங்கே பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அங்கே உள்ள மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக வாக்கு சதவீதத்தை கொடுத்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தல்  பிரதமரின் எடை தேர்தலாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உபியில் ஒன்பது இடங்களில் 7 இடங்களில் பாஜக வென்று இருக்கிறது. அதேபோல கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. கேரளாவில் வயநாடு வெற்றி அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் பிரியங்கா காந்தியின் வெற்றி இந்தியா கூட்டணியின் முடிவுரையாக இருக்கும்.  பிரியங்கா காந்தி வேண்டுமென்றால் அங்கே வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் இந்தியா கூட்டணி மற்ற இடங்களில் தோல்வியடைந்துள்ளது.

பிரியங்கா காந்தி பாராளுமன்றத்திற்கு சென்றது அப்பட்டமான வாரிசு அரசியல் வெளிப்பாடு. வயநாட்டில் வெற்றி பெற்றது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றினார். மகாரஷ்டிராவில் பாஜக மீதும் பிரதமர் மோடியின் திட்டங்களின்  மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளது போல் தமிழக மக்களும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என தமிழிசை கோரிக்கை விடுத்தார். 2026 இல் அந்த நம்பிக்கையை வைத்து எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நினைக்கிறோம். ஒன்றிய மாநில அரசுகள் ஒரே ஆட்சியாக  இருந்தால் அந்த மாநிலத்திற்கு எவ்வளவு நல்லது கிடைக்கும் என்பதை மகாராஷ்டிரா நிரூபித்திருக்கிறது.

கர்நாடக: சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

ஆனால் தமிழகத்தில் முதலமைச்சர்,  பாராளுமன்றத்தில் மென்மையாக பேசாதீர்கள் வன்மையாக பேசுங்கள் என்று கூறுகிறார். பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. முதலமைச்சர் பாஜகவுடன் மோதல் போக்கை கையாள்கிறார். இது தமிழகத்திற்கு எந்த ஒரு நலனையும் தராது. முதலமைச்சர் மோதல் போக்கை கடைப்பிடித்தாலும். 187 கோடி தூத்துக்குடி துறைமுகத்திற்கும், 85 கோடி சென்னை துறைமுகத்திற்கும், அதேபோல் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு நிதியுதவி என ஒன்றிய அரசு உதவி செய்து கொண்டுள்ளது என பேசினார்.

MUST READ