Homeசெய்திகள்அரசியல்காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது - எச்.ராஜா

காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது – எச்.ராஜா

-

- Advertisement -
kadalkanni

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது - எச்.ராஜா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் செயல்படும் (apcnewstamil.com)

இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் கள்ளச்சாராயம் விற்பனையை திமுக அரசு தடுக்கவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவல்துறை ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி பாஜகவினரை கைது செய்தது.

காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது - எச்.ராஜா

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும் காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.

காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது - எச்.ராஜா

மேலும், தமிழகத்தில் சாராய சாம்ராஜ்யத்தை நிறுவிய கருணாநிதி வழியில், அவரது மகன் ஸ்டாலின் நடப்பதாகவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்தார்.

MUST READ