Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் செயல்படும்

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் செயல்படும்

-

- Advertisement -

நாளை மறுநாள் ரேஷன் கடைகள் செயல்படும்

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய தினங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டன.

அதன் பயனாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 திட்டத்தின் கீழ் இந்த மாதத்திற்கான தவணை  ஜூன் 15 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பயனாளர்களின் வங்கி கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டது.

என்னோட அண்ணன், என்னோட தளபதி….. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அட்லீ!

இவ்வாறு  2023  செப்டம்பர் முதல் தற்போது வரை மாதமாதம் 15-ம் தேதி திட்டத்திற்கான ரூ. 1000 வங்கி கணக்கில் க்ரெடிட் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2.5 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு ரூ. 1000  வழங்க திட்டமிட்டுள்ளனர். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கும் பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய  தினங்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டதை ஈடு செய்ய கடந்த சனிக்கிழமை (ஜூன் 15) ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 16) ஆகிய இரண்டு நாட்கள் வார விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நான்காவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ