Homeசெய்திகள்அரசியல்‘யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்..?’ விஜயை பங்கப்படுத்திய பிரபல நடிகர்

‘யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்..?’ விஜயை பங்கப்படுத்திய பிரபல நடிகர்

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாடு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு என அறிவித்திருப்பதை பல அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

இந்நிலையில், திமுக ஆதரவாளரும், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..’’ எனத் தெரிவித்துள்ளார்.

போஸ் வெங்கட்டின் இந்தப்பதிவுக்கு கடுமையான எதிர் உரையாற்றி வருகின்றனர் விஜய் ஆதரவாளர்கள். ‘‘யாரோ ஒரு நடிகரின் விழாவிற்கு அவரை பார்க்க வந்த சில ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடுவில் ஒரு நாலு வரி பேச நீ எவ்வளவு மனப்பாடமும் ஒப்பிப்பும் செய்தாய்?

அவனுக்கும் ஒரு போட் விட்டிருக்கலாம்....அஜித்தின் செயல் குறித்து போஸ் வெங்கட் வேதனை!

அப்போது தன்னை மட்டுமே பார்க்க வந்த ஐந்து லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரம் பேச அவர் பல மடங்கு மனப்பாடமும் ஒப்பிப்பும் செய்வதில் எந்த தவறும் இல்லை’’ எனப் பதிலை கொடுத்து வருகின்றனர்.

MUST READ