ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து டெல்லியில் தற்போது உள்ளது. உத்திரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் வரை உள்ள மீதமுள்ள 447 கிலோ மீட்டர் தூரமுள்ள நடைபயணம் நாளை தொடங்கவுள்ள நிலையில், உத்திரபிரதேச மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்புக்கு நன்றி! அதேநேரத்தில் நடைபயணம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா ஒரு புவியியல் விரிவாக்கத்திற்கு மேலானது. இதில் அன்பு, அகிம்சை, இரக்கம், ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரே நேர்மறையான கூறுகளாகும். நமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் நடைபெறும் நடைபயணம் அதன் இலக்கை அடைய வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என அகிலேஷ் பேசியது குறிப்பிடத்தக்கது.