தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமான் ஆர்.எஸ்.எஸ் -ன் தோழனாக விளங்குகிறார் – உண்மையான முகம், உருவம் இப்போது தெரிந்திருக்கிறது அது புலி அல்ல பூனை என்பது அருப்புக்கோட்டையில் விருதுநகர் எம்.பி மாணிக்கத்தாகூர் பேட்டி.
ஈரோட்டில் போட்டி போட ஆளே இல்ல எல்லாம் ஓடி, ஒதிங்கிட்டாங்க – ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். மதுரை அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இணைப்பு ரயில்வே திட்டம் நிறுத்தப்பட்டது. மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்ற போக்கை நிறுத்த வேண்டும் – பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று அருப்புக்கோட்டையில் பல்வேறு கிராமங்களில் நன்றி தெரிவிப்பதற்காக வந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பேட்டி
இந்திய கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம்தாகூர் இன்று அருப்புக்கோட்டையில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செம்பட்டி கிராமத்தில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது.
மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி இடையே இரயில் திட்டத்தை மோடி அரசு நிறுத்தி இருப்பது மிகவும் கவலைக்குரியது, கண்டிக்கக் கூடியது. இந்த மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில்வே திட்டம் மன்மோகன் சிங் அரசால் கொண்டு வரப்பட்டது. மதுரை அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இணைப்பு ரயில்வே திட்டம் மிக மிக முக்கியமான திட்டம். இதற்கு தொடர்ந்து மத்திய அரசு எந்த பணிகளும் செய்யாமல் வெறும் 20 சதவீத பணிகள் மட்டுமே செய்து அதனை கைவிட்டு இருப்பது ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி சொல்லி இருப்பது வெட்கக்கேடான விஷயம்.
இது குறித்து தமிழ்நாட்டின் அமைச்சருடைய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் தமிழ்நாடு அரசு இந்த ரயில்வே திட்டத்தை நிறுத்த விரும்பவில்லை எனவும் இதற்காக தொடர்ந்து முதலமைச்சரும் நிதியமைச்சர் கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழ்நாடு அரசின் வாதமாக உள்ளது.
இந்த ரயில்வே திட்டம் நிறுத்தப்படக்கூடாது. மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்ற போக்கை நிறுத்த வேண்டும். பிரதமர் மோடி இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக இந்த திட்டத்தை துவங்க வேண்டும். மத்திய அமைச்சர் பொய் குற்றச்சாட்டை கூறுவது சம்பந்தமாக அவர்கள் மீது வழக்கு தொடரப்படுமா என்ற கேள்விக்கு பாராளுமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 4 வருடங்களுக்குள் முடிய வேண்டிய விஷயம்.
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய கூட்டணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வருகின்ற 31-ந்தேதி முதல் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தில் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ரயில்வே திட்டம் சம்பந்தமாக தொடர்ந்து குரல் எழுப்புவோம் என்று பேசினார்.
எச்.ராஜா – சீமானுக்கு எங்களது ஆதரவு உண்டு என தெரிவித்தது சம்பந்தமான கேள்விக்கு
தந்தை பெரியார் அவர்களை இழிவாக பேசுகின்ற சீமான் அவர்கள் தமிழக மண்ணுக்கு எதிராகவும், தமிழர்களுடைய சமூக நீதிக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு எதிரான மன நிலையுடன் இருக்கிறார். அவருக்கு எங்கிருந்து இந்த ஆதரவு வந்தது என வியப்பாக இருந்தது. அக்கா தமிழிசை அவர்கள் சொன்னதைப் போல டீம் பார்ட்னராக சீமான் அவர்களும் தமிழிசை அக்கா அவர்களும் இருக்கிறார்கள் இப்பொழுது அண்ணன் எச்.ராஜா அவர்களுடைய ஆதரவும் சீமானுக்கு வந்திருக்கிறது.
அருமை சகோதரர் அண்ணாமலை அவர்களுடைய ஆதரவும் வந்திருக்கிறது சீமான் அவர்களுக்கு இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது எச்.ராஜா அண்ணன், அக்கா தமிழிசை, சகோதரர் அண்ணாமலை அவர்களுடைய உற்ற நண்பனாக சீமான் அவர்கள் விளங்குகிறார்.
ஆக மொத்தம் பாஜகவினுடைய, ஆர்எஸ்எஸினுடைய தோழனாக விளங்குகிறார் சீமான் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. அண்ணன் சீமான் அவர்களுடைய முகமூடி இப்போது கலண்டு இருக்கிறது. உண்மையான முகம், உருவம் இப்போது தெரிந்திருக்கிறது அது புலி அல்ல பூனை என்பது வெளியே தெரிந்திருக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, ஈரோட்டில் போட்டி போடவே இப்ப ஆளே இல்ல எல்லாம் ஒதுங்கி ஓடிட்டாங்க அண்ணன் பழனிச்சாமி அவர்களும் தேர்தல்ல நிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். எல்லாத்துக்கும் நெஞ்ச நிமித்தி கொண்டிருந்த சகோதரர் அண்ணாமலை ஒதுங்கி உட்கார்ந்துட்டாரு ஏறக்குறைய ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக உள்ளது என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பேசினார்.