Homeசெய்திகள்அரசியல்திமுக கூட்டணியில் சேர தயார்- சீமான் அதிரடி பேட்டி

திமுக கூட்டணியில் சேர தயார்- சீமான் அதிரடி பேட்டி

-

திமுக கூட்டணியில் சேர தயார்- சீமான் அதிரடி பேட்டி

திமுக கூட்ணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால் திமுக கூட்டணியில் சேர தயார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு கேட்கிறார். ஜெயலலிதாவாக இருந்தால் காவிரியில் தண்ணீர் தராவிடில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பார். 18 ஆண்டுகள் மத்திய அரசி அங்கம் வகித்த திமுக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக கூட்ணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால் திமுக கூட்டணியில் சேர தயார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை பற்றி பேசுகிறாரே தவிர அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அந்த கட்சி புனித கட்சி ஆகிவிட்டதா?. கோடநாடு கொலை வழக்கை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை. நேர்மையானவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும்” என்றார்.

MUST READ