Homeசெய்திகள்அரசியல்ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட்-பெண் வன்கொடுமை சட்டம் கீழ் வழக்கு பதிவு

ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட்-பெண் வன்கொடுமை சட்டம் கீழ் வழக்கு பதிவு

-

ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்  சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளீட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு 

ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட்-பெண் வன்கொடுமை சட்டம் கீழ் வழக்கு பதிவு

சென்னை கொருக்குப்பேட்டை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த பெண் இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம், காப்பர் டி அணிந்திருப்பதால் ஏற்பட்ட வலியின் காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு ரேடியாலஜி மருத்துவர் கோகுலகிருஷ்ணன் சிகிச்சை மேற்கொண்டபோது அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்தப் பெண் மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் இது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர் துறை மருத்துவ கவுன்சில் தலைமையில் விசாரணை நடத்தினர்.விசாரணையில் கோகுல கிருஷ்ணன் முதுநிலை மருத்துவ படிப்பு படித்து வருகிறார் என்பதும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் போது தவறாக நடந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் சங்கு மணி விசாரணை நடத்தி மருத்துவர் கோகுலகிருஷ்ணனை தற்காலிக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.இதுகுறித்து அந்த பெண் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் கோகுல் சிகிச்சை அளிக்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ மாணவர் கோகுல கிருஷ்ணன் மீது
பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ