spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழக அமைச்சரவை மாற்றம் - பிடிஆர் ஆடியோ விவாதம்

தமிழக அமைச்சரவை மாற்றம் – பிடிஆர் ஆடியோ விவாதம்

-

- Advertisement -

 

tamilnadu

we-r-hiring

பிடிஆர் ஆடியோ, துரைமுருகன் பேச்சு சர்ச்சை உள்ளிட்ட நெருக்கடியான நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்ட அரங்கில் முதல்வர் மு. க .ஸ்டாலின் தலைமை இந்த அமைச்சரவை கூட்டம் தொடங்குகிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. மூன்றாம் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் திட்டமிட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. வேலை செய்யாமல் இருக்கும் அமைச்சர்களுக்கு பதவி பறிப்பு இருக்கும் என்ற பரபரப்பு இருக்கிறது.

ptr

திமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் பதவி பறிப்பு அல்லது இலாகா மாற்றம் இருக்கும் என்று தகவல் பரவுகிறது . நிதி அமைச்சர் பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோவால் ஏற்பட்ட சர்ச்சை ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

முன்னதாக நேற்று அமைச்சர் பிடிஆர், முதல்வரை சந்தித்து பேசி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அமைச்சர்கள் பலரும் வெளிநாடு செல்ல இருக்கிறார்கள். இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.

பிடிஆர் ஆடியோ விவாதம், அமைச்சரவை மாற்றம் ஆகிய முக்கிய முடிவுகளை முதல்வர் கனவு கணக்கிட்டு வைத்திருப்பதால் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

MUST READ