spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை - பேரவையில் அதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை – பேரவையில் அதிமுக வெளிநடப்பு

-

- Advertisement -

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக பேரையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி-11ம் தேதி) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

we-r-hiring

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பட்டியல் வைத்துள்ளேன். பொதுவாக கூறாமல் ஆதாரத்துடன் கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

MUST READ