Homeசெய்திகள்அரசியல்நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது - சா.மு.நாசர்

நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்

-

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திரைப்பட நடிகர் தீனா, இயக்குனர் ரத்தினக்குமார், வி.ஜி சந்தோஷம், தமிழக சட்டப்பேரவை கொறடா கோ.வி.செழியன், மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், புலவர் சண்முக வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட நடிகர் தீனா, வடசென்னையில் இருந்து சிகரத்தை தொடுவது மிக மிகக் கடினம் என்றும் வடசென்னையில் இருப்பவர்களை சிகரத்தை தொட விட மாட்டார்கள் என்றார்.

ஏனென்றால் வடசென்னையில் உள்ளவர்களை ரவுடி பையன், அறிவில்லை, அயோக்கியன் என்று சொல்லுவார்கள். அப்படி இல்லையென்றால் கோவக்காரர்கள் என்று கூறுவார்கள் என்று தெரிவித்தார்.

வடசென்னையில் உள்ளவர்களுக்கு நிறைய பெயரை இதுபோன்று வைத்துள்ளனர். வட சென்னையில் இருப்பவர்களை திரும்பிப் பார்க்கும் பொழுது தான் தெரியும் அவர்கள் எவ்வளவு மனித நேயம் மிக்கவர்கள், வடசென்னையில் தான் ஜாதி, மாதம் கிடையாது, வெறும் மனித நேயம் தான் வடசென்னையின் அடையாளம் என்றும் இங்கு இருப்பவர்கள் தொடர்ந்து ஓடி கொண்டு இருந்தால் ஒரு நாள் வெற்றி பெறுவோம். அப்போது இந்த ஊரே நம்மை திரும்பி பார்க்கும், பதவியில் முதல்வர் கூட ஆகலாம் என்று தெரிவித்தார் நடிகர் தீனா.

இதனை அடுத்து பேசிய மேயாத மான் திரைப்பட இயக்குனர் ரத்தினக் குமார், வடசென்னையில் நடைபெரும் நிகழ்ச்சி என்பதால் தான் இதில் கலந்து கொண்டேன் என்றார்.

நான் எடுத்த 3 படங்களில் வடசென்னையில் எடுத்த படத்தின் பொழுது அங்கு உள்ள மக்கள் என்னை வசதியாக பார்த்து கொண்டார்கள், சாப்பிட்டு விட்டாயா என்று என்னை அன்பாக கேட்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் சென்று பார்த்தால் தான் தெரியும் வடசென்னையில் உள்ள மக்கள் விளையாட்டு மற்றும் கலைகளில் எந்த அளவுக்கு ஆரவும் மிக்கவர்களாக உள்ளார்கள் என்றும் வடசென்னையில் இருப்பவர்கள் தான் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று கூறினார்.

மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேசிய பொழுது, நான் இயல்பாக பேச கூடியதை கூட இந்த பொறுப்பால் பேச முடியவில்லை என்று தெரிவித்தார்.

மனித வேதனை என்னவென்று நான் இங்கு பிறந்ததால் தான் தெரிந்தது. மக்கள் உணர்வுகளை பார்க்க வைத்தது வடசென்னை, சென்னையில் சார்பட்டா உள்ளிட்ட கலைகள் இங்கே இல்லாமல் போய் விட்டது என்று வேதனை தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கொரோனாவால் நாம் அனைவரும் விலகி இருந்தோம், என் மீது மிகவும் பாசத்துடன் இருக்கும் மனைவி கூட என்னை விட்டு விலகி இருந்ததாக தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்று தீவிரடைந்த காலத்தில் நான் மிகவும் கவனமாக இருபேன். தினமும் காலையில் பத்திரிக்கை எடுக்கும் போது கூட நான் கை கிளவுஸ் போட்டு தான் பத்திரிக்கை எடுப்பேன். அப்படி இருந்தும் கூட எனக்கு கொரோனா வந்து படாத பாடு பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா வந்ததும் என் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்து விட்டது. அப்போது என் மனைவியை தேடி பார்தேன், என் மீது பாசமாக இருந்த என் மனைவி கூட எனக்கு கொரோனா வந்ததும் ஒரு கிலோ மீட்டர் துரத்தில் தள்ளி நின்று அருகில் கூட வராமல் மருத்துவமனைக்கு தனியாக சென்றேன் என்று கூறினார்.

எனது மகன் மருமகள் கூட அருகில் வராமல் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறினார். கண்ணதாசன் பாடிய பாடல் ஒன்று பொய் என்று அப்போதுதான் தெரிந்தது “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, கடைசி வரை யாரோ….” அந்தப் பாடலை பொய்யாக்கியது கொரோனா என்று தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு சென்று 17 நாள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது மருந்து கூட கண்டுபிடிக்கவில்லை. நீ ஒன்னும் கவலைப்படாதே நான் இன்னும் 4,5 நாட்களில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறினேன்.

 

நான் அதற்கு ஒன்றும் அழவில்லை எனக்கும் கொரோனா என்று கூறினார். அப்போது எனக்கு வடிவேலின் நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்க்கு கேட்டுவிட்டது என்று வடிவேலின் காமெடியை கூறி அமைச்சர் நாசர் சிரிப்பளையை ஏற்படுத்தினார்.

கொரோனா சங்கிலித் தொடர் அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்திருந்ததை பற்றி பேசினார்.

MUST READ