Homeசெய்திகள்அரசியல்இது ஆரம்பம்தான்… இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய- டி.கே.சிவகுமார்..!

இது ஆரம்பம்தான்… இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய- டி.கே.சிவகுமார்..!

-

- Advertisement -

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொள்ள வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.    

தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும். பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது. மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு. பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்” எனத் தெரிவித்தார்.

தொகுதிறுவரையறை கூட்டுக் குழு குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ”இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம்.. இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தமிழ்நாடு முதல் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் செயல் பெருமையாக உள்ளது. இந்த கூட்டு நடவடிக்கை குழு மிகப் பெரிய வெற்றி அடையும் என நம்புகிறேன். மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், ”தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா? மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை. பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

MUST READ