கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்து வருகிறாா். அவா் பேட்டியில், ”பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். 40 பேர் உயிரிழந்து உள்ளனர். யாருக்காவது இந்த எண்ணம் வருமா? அப்படி வந்தால் அவர்கள் நல்ல அரசியல் தலைவரா? விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எப்படியும் உண்மை வெளிவரப்போகிறது. எந்த விசாரணை ஆணையமாக இருந்தாலும், முதல் கட்ட அறிக்கையை கொடுப்பார்கள். அதில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும், அதற்குப் பிறகு பேசலாம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது. அரசியல் தலையீடு என, நாங்கள் யாரையும் குறை கூறவில்லையே. முதலமைச்சரும் யாரையும் குறை சொல்லவில்லை.
ஒரு மிகப்பெரிய மரணம் நடந்துள்ளது. வேதனை, துன்பம், துயரத்தில் இந்த மாதிரி நேரத்தில் மலிவான அரசியல் செய்வதை, அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது இதே அருணா ஜெகதீசனை அதிமுகவினர் நியமித்தனர். எந்த நம்பிக்கையில் நியமித்தார்கள். அவர்களால் நீதி கிடைக்காது என்பதற்காக நியமித்தார்களா? அதிமுக கூட்டணியில் உள்ள அவர்களை கேட்கச் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளாா்.
பிரபாஸ் நடிக்கும் ஹாரர் – காமெடி படம்…. முக்கிய அப்டேட்டை பகிர்ந்த படக்குழு!
