spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டிக்..டிக்..கடிகார சர்ச்சை - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

டிக்..டிக்..கடிகார சர்ச்சை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

-

- Advertisement -

ஓ.பி.எஸ் அணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து ஒரு கம்பெனி போல செயல்பட்டு வருகிறது. இதனால், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பி.எஸ் நட்பை விட்டு விலகுவது நல்லது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

we-r-hiring
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, போன்றவற்றை உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 18 மாதங்களில் திமுக ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பால் விலை போன்றவற்றை திமுக அரசு உயர்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதால் மக்கள் வாழ வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 18 மாதங்களில் திமுக ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பால் விலை போன்றவற்றை திமுக அரசு உயர்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதால் மக்கள் வாழ வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

திமுக அரசிற்கு எதிர்ப்பு தெரிக்கும் வகையில் அவரே எழுதிய ஒரு பாடலை பாடினார்.  

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி

அர்ஜென்டினா வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன், என் வாக்கு பளித்தது. அர்ஜெட்டினா வெற்றி பெற்றது. இதனால் உங்களுக்கு அருள்வாக்கு கேளுங்க சொல்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன். அர்ஜென்டினா வெற்றி பெற்ற பொழுது உதயநிதி ஸ்டாலின் எங்கே சென்றார்? விளையாட்டினை ஊக்கப்படுத்த வேண்டியது அமைச்சரின் கடமை.

பண்ருட்டி ராமச்சந்திரன், மூத்த தலைவராக இருந்தவர். அவரை மதிக்கிறேன், கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டேன். கண்ணுக்கு தெரிந்து கட்சியின் கொடி, சின்னம், மாவட்ட செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் பல்வேறு விழாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன், மூத்த தலைவராக இருந்தவர். அவரை மதிக்கிறேன், கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டேன். கண்ணுக்கு தெரிந்து கட்சியின் கொடி, சின்னம், மாவட்ட செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பி.எஸ் எதையும் செய்யவில்லை. அதற்கான ஆட்களும் அவரிடம் இல்லை. அவருக்கு நன்மதிப்பு உள்ளது. அதனை கெடுத்துக்கொள்ள கூடாது என்றும் “கூடா நட்பு கேடாய்“ முடியும் என்று சொல்வார்கள். அது போல, ஓ.பி.எஸ் நட்பை விட்டு விலக வேண்டும் என பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு  ஜெயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

ஓ.பி.எஸ் எதையும் செய்யவில்லை. அதற்கான ஆட்களும் அவரிடம் இல்லை. அவருக்கு நன்மதிப்பு உள்ளது. அதனை கெடுத்துக்கொள்ள கூடாது என்றும் “கூடா நட்பு கேடாய்“ முடியும் என்று சொல்வார்கள்
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பாஜகவுடன் தோழமையுடன் தான் இருந்து வருகிறோம். திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. பதவி மட்டுமே முக்கியம். அதனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பாஜக தான் முடிவு செய்ய வேண்டும்.

அண்ணாமலையின் கை கடிகாரம் 5 லட்சம் ரூபாய் என தெளிவு படுத்தியுள்ளார். என் வாட்ச் விலை 10 ஆயிரம் ரூபாய் தான். அதே போல அண்ணாமலையும் தெரிவித்துள்ளார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மனசாட்சியை தொட்டு எத்தனை வாட்ச் உள்ளது என கூற வேண்டும்.

அண்ணாமலையின் கை கடிகாரம் 5 லட்சம் ரூபாய்
5 லட்சம் ரூபாய்

சட்டமன்றத்தில் தினமும் ஒரு வாட்ச் கட்டிக்கொண்டு வருவார்கள். அதன் விலை பல லட்சம் ஆக உள்ளது. ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களாக உள்ளனர். இது உழைத்து வாங்கியதானா? என கேள்வி எழுப்பிய ஜெயகுமார், முதலமைச்சர் அணியும் உடை, வாட்ச் போன்றவற்றை கணக்கெடுத்தால் அவர் ஒரு நடமாடும் வங்கியாக இருப்பார் என கூறினார்.                    

முதலமைச்சர் தினமும் ஒரு வாட்ச் கட்டிக்கொண்டு வருகிறார். தன்னிடம் எத்தனை வாட்ச் உள்ளது என்பதை வெளிப்படையாக கூறுவாறா? நடமாடும் வங்கியாக இருந்து வருகிறார் என ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.

தினமும் ஒரு வாட்ச் கட்டிக்கொண்டு வருகிறார்

அம்மா உணவகம் ஏழைகளின் பசியை போக்க அமைக்கப்பட்ட ஒரு மகத்தான திட்டம், நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை சரி கட்டி கடந்த ஆட்சியில் அம்மா உணவகத்தை நடத்தினோம். ஆனால், அதனை கைவிட்டு விட்டு  அவரது அப்பாவின் பெயரில் கொண்டுவர முயற்சிக்கிறார்.

அம்மா உணவகம்

அதிமுக தலைமையில் தான் சட்டப் பேரவை தேர்தலில் கூட்டணி அமைந்தது, பாஜகவுடன் தோழமை நட்பு உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. அதற்கான பணிகளை அதிமுக தொடங்கி உள்ளது.  தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். அதிமுக தலைமையை ஏற்று எந்த கட்சிகள் வருகிறதோ அந்த கட்சிகளுடன் கூட்டணி முடிவு செய்யப்படும்.

புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்க, அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டதாக இருந்தால், மக்கள் ஏன் அப்பொழுது போராடவில்லை.  அதிமுக ஆட்சின் போது செய்த பரிந்துரையை திமுக நிராகரித்திருக்கலாம்.

புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்க, அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டதாக இருந்தால், மக்கள் ஏன் அப்பொழுது போராடவில்லை.
பரந்தூரில் புதிய விமான நிலையம்

கிராம மக்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, 136 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து அரசுக்கு எந்தவித கவலையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக சாடினார்.

MUST READ