spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் - உதயநிதி

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் – உதயநிதி

-

- Advertisement -

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

முதலாவதாக திருவல்லிக்கேணியின் நடுக்குப்பம் பகுதிக்கு மீனவ பஞ்சாயத்தின் சார்பில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை திறந்து வைத்தார்.

we-r-hiring

அதைத்தொடர்ந்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரூற்று வாரியம் மூலம் அமைக்கப்படும் சாலையோர உந்து நீர் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடுக் குப்பத்தின் ஒன்று முதல் எட்டு தெருக்கள் வரையிலும் நீலம் பாட்ஷா தர்கா தெருவிலும் இந்த திட்டப்பணிகால் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்படும் நிலையில், சாலையோர கழிவு நீருற்று நிலையம், புதிதாக கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகளும் நிறைவேற்றப்படும். இதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சரின் உதவியால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை போர்த்தி, நன்றி தெரிவித்தார். இதேபோல் சிலம்பம் விளையாட்டிற்கு உபகரணங்கள் வேண்டி மனு அளித்திருந்த நபருக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து டாக்டர் பெசன்ட் சாலையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்படும் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து பம்பிங் ஸ்டேஷன் சாலை மற்றும் ரிச்சி தெரு சந்திப்புக்கு உட்பட்ட 62-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகளை உதயநிதி திறந்து வைத்தார்.

முன்னதாக நம்ம கடை என்ற பெயரில் அன்றாடம் கிடைக்கும் தின்பண்டங்களுக்கான கடையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அந்த கடையில் இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களும் 90-களில் கிடைத்த தின்பண்டங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக, கடையில் பொருட்களை வாங்க வரும் நபர்கள் பைகளை கொண்டு வந்தால், 10 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த கடை நிர்வாகிகளின் கருத்தை உற்சாகப்படுத்தி, அமைச்சர் உதயநிதி அவர்களுடன் உரையாடினார்.

இறுதியாக சி.என்.கே. சாலை பகுதிக்கு உட்பட்ட 114-வது வார்டு பகுதியில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உதயநிதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அவர் மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவருமான சிற்றரசு உள்ளிட்ட ஏராளமானோர் உதயநிதி ஸ்டாலினுடன் கலந்து கொண்டனர்.

MUST READ