ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வி.சி. சந்திரகுமார், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
பிப்ரவரி 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021.ம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் மறைவிற்கு பின் இந்த தொகுதியில் 2023.ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
தற்போது அவரது மறைவால் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். இது தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானமும் நிறைவேற்றி இருந்தனர். இந்நிலையில் கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக போட்டியிடுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் – இரா.முத்தரசன்