அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை டி.டி.வி தினகரனின் அமமுக கட்சி நிர்வாகிகள் உதவியுடன் மீண்டும் இழுக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திட்டம் போட்டு வருகிறார் என்பது தான் அங்கே அலையடிக்கும் செய்தி.
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தி லிங்கம், டிடிவி.தினகரனிடம் சமீப காலமாக அதிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த மாவட்டத்தில், தங்களிடம் இருந்து அதிமுக கட்சிக்கு சென்ற முக்கிய நிர்வாகிகளை மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான வேலைகளும் திரைமறைவில் கச்சிதமாக நடந்து கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கு, வைத்திலிங்கத்துக்கு ஸ்கெட்ச் ஒன்றை அவரது ஆதரவாளர்களுக்கு போட்டு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் இழுப்பதன் மூலம், தஞ்சாவூரில் தன்னுடைய செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க முடியும் என வைத்தி லிங்கம் மிகவும் நம்புகிறார்

தனக்கு துணையாக டி.டி.வி.தினகரனின் அமமுக நிர்வாகிகளையும் வைத்து கொண்டு இந்த திட்டத்தை ரகசியமாக செய்து வருவதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் நமக்கும் நெருங்கியவர்கள் என்பதால் இந்த ரகசியத்தை நம்மிடமும் பகிர்ந்து கொண்டார்கள்..!


