நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய பேச்சு பல்வேறு தரப்பினரையும் உசுப்பேற்றி இருக்கிறது. அவர் சொன்னது போல யாரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அரசியல் கட்சிகளை அதற்கு அப்பால் உள்ள சினிமா போட்டியாளராக கருதப்படும் ரஜினியையும் குறிப்பிட்டு பேசியதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
யார் ஓட்டுப்போட்டாலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் நிச்சயம் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் ஓட்டுப் போட மாட்டார்கள் என்றும் மாநாட்டிலும் சுயநலமில்லையா? என மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை தாக்கி விஜய் பேசி விட்டார் என ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.
இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என பேசி விட்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரேவசம் செய்வேன் என்றார். அதன் பின்னர், இப்பவும் இல்லை. எப்பவும் இல்லை என பல ஆண்டுகளாக ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அரசியலுக்கு வரப்போவதாக பில்டப் கொடுத்து விட்டு அரசியலுக்கு கடைசியாக உடல்நலத்தை காரணம் காட்டி வரமுடியாது எனக் கூறியது ரசிகர்களை பேரதிர்சிக்கு உள்ளாக்கியது.
ஆனால், தொடர்ந்து சினிமாவில் மட்டும் எப்படி நடித்து வருகிறார் என்கிற விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க, நாம பாட்டுக்கும் நடிச்சோமா, நாலு காசு பார்த்தோமான்னு இருக்கலாம்னு தான் ஆரம்பத்தில் நானும் நினைச்சேன். ஆனால், நாம மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது சுயநலமில்லையா? நம்மள வாழ வச்ச இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணுமில்லையா? நிறைய காசு சம்பாதிச்சு என்ன செய்யப் போறோம். நம்ம மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என ஏகப்பட்ட கேள்விகள் வந்தது. அதற்கான பதிலாகத்தான் அரசியலில் களமிறங்குவது என்கிற முடிவை எடுத்தேன் என விஜய் பேசினார்.
மோசமான ஹாஷ்டேக்குகளை விஜய்க்கு எதிராக தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ஹேட்டர்களும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் சுயநலப் பேச்சு சூப்பர் ஸ்டாரை நேரடியாக தாக்குவதாக விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில், அதற்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். விஜய் மாநாடு இன்று நடந்த போதிலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே #நடிச்சது_பிட்டு_மாநாடு_ஷிட்டு, என்கிற ஹேடேக்கை உருவாக்கி எக்ஸ் தளத்தில் விஜயை தாக்கியதே ரஜினி ரசிகர்கள்தான்.