Homeசெய்திகள்அரசியல்ஏன் ஜி? தமிழ்நாடு, தமிழர்கள்-ன்னாலே அலர்ஜி..?' - பிரதமரை விளாசிய விஜய்

ஏன் ஜி? தமிழ்நாடு, தமிழர்கள்-ன்னாலே அலர்ஜி..?’ – பிரதமரை விளாசிய விஜய்

-

- Advertisement -

”ஏன் ஜி..? தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே அல்ர்ஜி?” என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தவெக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட 2,000 பேர் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளார்கள்.

இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுசீரமைப்பு, பரந்தூர் விமான நிலையம் போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், ”மாண்புமிகு மோடி ஜீ அவர்களே… என்னமோ உங்க பேரெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க; ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி? தமிழ்நாட்டிலிருந்து வரும் ஜி.எஸ்.டி.யை வாங்கிக்கிறீங்க, ஆனா பட்ஜெட்ல நிதியை தரமாட்றீங்க… இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க.

ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்கள் ஆரம்பித்தபோதே தெரிந்து விட்டது மோடி சார், நாட்டை நீங்கள் எந்த வழியில் மாற்ற நினைக்கிறீர்கள் என்று; தமிழ்நாட்டுடன் விளையாடாதீர்கள். தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக ஹேண்டில் பண்ணுங்க மோடி சார். தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன மாநிலம்” எனத் தெரிவித்தார்.

“Men may come and Men may go, But I go on forever” – என்ற கவிதையோடு தன் உரையை முடித்த விஜய், இந்தக் கவிதை William J. Flake எழுதியதாக கூறியிருந்தார். ஆனால் இக்கவிதை Alfred, Lord Tennyson-ஆல் எழுதப்பட்டுள்ளது. இத்துடன், “ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்” என்ற திருக்குறளுடன் உரையை முடித்தார் விஜய்.

MUST READ