இந்தியா கூட்டணியின் வெற்றி உறுதி என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணி கட்சி சார்பில் மல்லிகார்ஜுன் கார்க்கே பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜூன் 1ம் தேதி 7வது கட்டத் தேர்தல் முடிந்ததும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவின் அடிப்படையில் கருத்து கணிப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் இந்தியா கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று கூறுகிறது.
இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் யார் பிரதமர் என்கிற விவாதம் எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியில் நாடு முழுவதும் போட்டியிடுகின்ற பெரிய கட்சி காங்கிரஸ் மட்டுமே. அதனால் அந்த கூட்டணியில் அறிவிக்கப்படாத தலைவர் ராகுல்காந்தி
என்பதில் ஐயமில்லை.
காங்கிரஸ் கட்சி 327 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 150 தொகுதிகள் வரை வெற்றிப்பெற வாய்ப்பு இருக்கிறது. மீதி 150 இடங்களில் கூட்டணி கட்சிகள் வெற்றிப் பெறும் என்று கூறப்படுகிறது. ராகுல்காந்தி கூட்டணி கட்சியின் தயவில் பிரதமர் பதவியை ஏற்பாரா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் பதவிக்கு நான் போட்டியாளர் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவும் பிரதமர் பதவியை விரும்ப மாட்டார்கள் என்று கூறலாம்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே பிரதமராகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.