Homeசெய்திகள்ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்

ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்

-

சிறிய முதலீடு செய்தபோது ஒற்றுமையாக இருந்த மூன்று தோழிகள், பல கோடி லாபம் ஈட்டும்போது ஒரு தோழியின் ரூ.3 கோடி 60 லட்சம்  பணம் கையாடல்  செய்து மோசடியில் கைதாகி சிறை சென்ற இரு தோழிகளின் பின்னனி என்ன?

ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்

சென்னையை சேர்ந்த  கார்திகாயனி(39), சுதா(39) (BCA பட்டதாரி), சத்திய பிரியா(38) மூன்றுபேரும் நண்பர்கள். கடந்த 2011 ம் ஆண்டு கூட்டாக தொழில் செய்ய நினைத்து தலா 50 ஆயிரம் பணத்தை மூதலீடூ செய்து மூன்று பேர் அவர்களின் கணவர்கள் என பத்து பேரூடன் குரோம்பேட்டை சின்ன தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிப்பில் ஒரு வீட்டை அலுவலகமாக மாற்றி   மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை SKS Bio Analytical of System Pvt Lடிd என்ற பெயரில் துவக்கினார்கள். அவர்கள் தங்களின்  கடின உழைபால் நிறுவனம் வளர்ந்து லாபமும் அதிகரித்தது, பணியாளர்களும் அதிகரித்தனர், இந்த நிலையில் புகார்தாரர் கார்திகாயனி ஹைதராபாத் சென்றார், அதனால் சுதாவிற்கு தன் சார்பில் நிர்வாகம் மேற்கொள்ள பவர் கொடுத்துள்ளார்.

கொரோனா  நேரத்திலும்  கம்பெனி நல்ல லாபம்  கிடைத்தும்  கார்திகாயனிக்கு  15 லட்சம் தான் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கம்பெனி நிர்வாகம் தொடர்பாக 2021 ல் நேரில் சென்று பார்க்க முயன்ற போது தடுத்துள்ளனர், கணக்கும் முறையாக காட்டவில்லை, நிர்வாகம் நடத்த அனுமதி கொடுத்த பவரை கொண்டு  புதிய கணக்குகள் தொடங்கி அந்த கணக்குகளில் பணம் வரவு வைத்து சுதாவின் உறவினர்களுக்கு ஒரு கோடியே 60 லட்சம் பணம் பறிமாற்றம் செய்துள்ளனர். இதனை ஆதாரமாக கொண்ட கார்திகாயனி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ரூ.3 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தததாக 2021 ம் ஆண்டு புகார் செய்தார்.

ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்

அந்த புகாரை தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தலைமையிட ஏ.டி.சி ஆனந்தகுமார் மேற்பார்வையில் ஆய்வாளர் ராமதாஸ் புலன் விசாரணை செய்து வங்கிகளில் உரிய ஆவணங்கள் பெற்று விசாரித்தபோது கார்திகாயனியை சுதா, சத்திய பிரியா அகியோர் ஏமாற்றியுள்ளனர் என்பது தெரியவந்ததால்  அவர்கள் இருவரையும் கைது செய்து நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

நெருங்கிய பெண் தோழிகள் தங்களின் பெயர்களின் முதல் எழுத்தை கொண்டு துவங்கிய மருத்து கம்பெனியில் கோடியில் லாபம் பார்த்ததும் சக தோழி என என்னாமல் மோசடி செய்தது போலீஸ் விசாரனையில்  அம்பலமாகி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ