செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடை கழிவுகளில் இறங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பலியாவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தமிழக அரசு தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை தவிர்த்து நிரந்தர பணியாளராக பணி நியமனம் செய்ய வேண்டும் தூய்மை பணியாளர் குறைகளை தீர்க்க மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டுமென தூத்துக்குடியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் வேண்டுகோள்.
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டார் மாவட்டம் முழுவதும் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இஎஸ்ஐ பிஎப் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என தூய்மை பணியாளர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார் இதில் ஏராளமானோர் தங்களுக்கு முறையாக எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறுகையில்.
தமிழக அரசு விரைவாக தூய்மை பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்கள் என்ற அமைப்பில் இருந்து மாற்றி நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் நேரடியாக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் தமிழக அரசு தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணி காலியாகும் போது அது ஒப்பந்த பணியாக மாற்றப்படும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் போது குறைவான ஊதியம் கிடைப்பதால் தூய்மை பணியாளர்கள் மாற்றுப் பணிக்கு செல்கிறார்கள் அதன் காரணமாக செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது அவர்கள் உயிர்ப்பலி ஏற்படுகிறது எனவே இந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும்
இந்தியாவில் தமிழகத்தில் தான் செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடைக்கடை சுத்தம் செய்யும் போது தூய்மை பணியாளர்கள் பலியாவதில் முதல் இடத்தில் உள்ளது கடந்த 20 ஆண்டுகளில் 257 பேர் பலியாகி உள்ளனர் என அவர் தெரிவித்தார்.